இலங்கையில் அதிவிரைவாக வளர்ச்சிகண்டுவருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, இலங்கையில் கையடக்கமான தனது கணினி tablet உற்பத்தி வரிசையை விஸ்தரிக்கும் வகையில், MediaPad உற்பத்தி வரிசைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

MediaPad T1-7”, MediaPad T1-10” மற்றும் MediaPad M2 8.0 ஆகிய உற்பத்திகள் சந்தையில் கிடைக்கப்பெறுவதுடன், அவற்றை ரூபா 16,999 முதல் ரூபா 49,999 வரையான சிறந்த விலைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.

Huawei MediaPad T1-7” ஆனது மிகவும் நியாயமான விலையில் கிடைக்கின்ற, அதேநேரம் சந்தையில் கிடைக்கப்பெறுகின்ற அதியுயர் தொழிற்படுதிறன் கொண்ட சாதனங்களுள் ஒன்றாகக் காணப்படுகின்றது. 

குறிப்பாக வேலைப்பளுமிக்க அதிகாரிகள் மற்றும் களப்பணியில் ஈடுபட்டுள்ள விற்பனை ஆளணியினர் போன்று செல்லுமிடத்திலிருந்து கொண்டே தமது பணியை இலகுவாக முன்னெடுக்க விரும்புபவர்களுக்கு இச்சாதனம் உதவுவதுடன் தமது கரங்களில் மிகவும் நேர்த்தியான tab சாதனம் ஒன்றின் அனுபவத்தை விரும்புகின்ற பாவனையாளர்களுக்கும் மிகவும் பொருத்தமான ஒரு சாதனமாக அமைந்துள்ளது.

Huawei Media Pad T1 – 7 ஆனது வியத்தகு வகையில் 8.5 மிமீ மெல்லிய வடிவில் வெறுமனே 278 கிராம் எடை கொண்டதாக மிகவும் எடை குறைந்த தனித்துவமான உலோக மேற்பாகத்தைக் கொண்டுள்ளதுடன் உங்களது பையில் அல்லது சட்டைப் பையில் இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியவாறு மிகவும் கையடக்கமானதாகவும் எடை குறைந்ததாகவும் காணப்படுகின்றது. மேலும் பிரகாசமான வர்ணங்கள் மற்றும் வேறுபட்ட எதிர்நேரான வர்ணங்களை வழங்கும் வகையில் Adobe RGB color space இல் 90% இற்கும் மேற்பட்ட அளவை மீள்உற்பத்தி செய்யும் oncell IPS display தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

16M  உண்மையான வர்ணத்துடனான WSVGA முகத்திரையுடன் தெளிவான விம்பத் தோற்றத்தை உங்களால் காண முடிவதுடன் 178° பரந்த கோணத்திலான  பார்வையானது இயற்கையாகவே சுழல்கின்ற முகத்திரையை ஒத்த சிறப்பம்சத்தை வழங்குகின்றது.

இலங்கையில் Huawei சாதனங்களுக்கான தலைமை அதிகாரியான ஹென்றி லியு கூறுகையில்,

“இலங்கையில் பாரம்பரியமான ஸ்மார்ட் மொபைல் தொழில்நுட்பத்தை விஞ்சும் வகையில், முற்றிலும் புதிய அனுபவத்துடன், அதிசிறந்த தரத்தின் துணையுடன், மிகச் சிறந்த தொழில்நுட்பத்தை வழங்குவதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். Huawei MediaPad ஆனது எமது உற்பத்தி வரிசையில் மற்றுமொரு இணைப்பாக அமைந்துள்ளதுடன், இது தனித்துவத்தை நாடுகின்ற இலங்கை மக்கள் அனைவரின் வாழ்க்கைமுறையையும் மேம்படுத்தும்”.

MediaPad T1 7.0 ஆனது உங்களது மொபைல் தொலைபேசி மற்றும் tablet சாதனத்திற்கு ஒப்பாகத் தொழிற்படும் திறன் கொண்டது. 3G மற்றும் Wi-Fi இணைப்புக்களுடன் வேகமான தொழிற்பாட்டை சாத்தியமாக்கும் முடிவற்ற இணையத்தை அனுபவிப்பதுடன் அதி வேகம் கொண்ட வலையமைப்பு இணைப்புக்கள் மற்றும் உயர் தர குரல் அழைப்புக்களுக்கும் உதவுகின்றது. 

நீண்ட நேரத்திற்கு நீடித்து உழைக்கின்ற 4100 mAh மின்கலமானது சாதனம் தொழிற்படாதிருக்கும் சமயத்தில் 300 மணித்தியாலங்களுக்கும் மேலான மின்வலுவை உங்களுக்கு வழங்குவதால் உங்களுக்குத் தேவைப்படும் நேரங்களில் எல்லாம் நீங்கள் உங்களது tablet சாதனத்தை பயன்படுத்த முடியும். மீளவும் மின்னேற்றம் செய்யவேண்டிய கவலையின்றி 8 மணித்தியாலங்கள் வரை இணையத்தை பிரவுசிங் செய்யவோ அல்லது சில திரைப்படங்களை பார்த்து மகிழவோ (12 மணித்தியாலங்கள் வரை) உங்களால் முடியும்.

2016 ஆம் ஆண்டில் கணிசமான வளர்ச்சியை Huawei எதிர்பார்த்துள்ளதுடன் அது கடந்த ஆண்டிலும் ஈடுஇணையற்ற சாதனைகளைப் படைத்திருந்தது. GFK இன் புள்ளிவிபரங்களுக்கு அமைவாக இலங்கையில் 2016 ஆண்டின் 3 ஆவது காலாண்டில் 24.4% சந்தைப் பங்கினை Huawei பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் நாட்டில் இரண்டாம் இடத்தில் திகழ்ந்து வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமம் என்ற தனது ஸ்தானத்தை மேலும் விரைவுபடுத்தி வருகின்றது. 

Brand Finance தரப்படுத்திலின் பிரகாரம் 2016 ஆம் ஆண்டில் உலகில் மிகவும் பெறுமதிகொண்ட 100 வர்த்தகநாமங்களில் ஒன்றாக Huawei மீண்டும் பெயரிடப்பட்டுள்ளதுடன் அது 47 ஆவது ஸ்தானத்தில் நிரற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்துவதில் முன்னிலை வகித்துவருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா, சிங்கர் மெகா, சிங்கர் பிளஸ் மற்றும் சிசில் வேர்ல்ட் அடங்கலாக 400 இற்கும் மேற்பட்ட காட்சியறைகள் தற்றும் நாடெங்கிலும் 1,500 முகவர் காட்சியறைகளைக் கொண்டுள்ள சிங்கரின் டிஜிட்டல் ஊடக வலையமைப்பு ஆகியவற்றுடனான நாட்டின் அதிவிசாலமான வலையமைப்பினூடாக இந்த உற்பத்திகள் அனைவருக்கும் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யும்.