தேசிய கையடக்க தொலைபேசி சேவை வழங்குனரான SLT மொபிடெல் நிறுவனத்தின் 2016 ஆண்டுக்கான “Cash Bonanza” சீட்டிழுப்புதிட்டமானது வாடிக்கையாளரிடையே அதிக பிரபல்யமடைந்துவருகின்றது. 

இதன் மூலம் மாதாந்த மற்றும் நாளாந்த அடிப்படையில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். தொலைத்தொடர்புதுறையின் முன்னோடியான மொபிடெல் நிறுவனம் 2016 ஆம் ஆண்டு முழுவதும் 3500 இலட்சம் ரூபா பெறுமதியான பணப்பரிசினை தமது வாடிக்கையாளர்களிடையே பகிர்ந்தளிக்கவுள்ளது. அத்துடன் மாதாந்தம் தெரிவு செய்யப்படும் மாபெரும் வெற்றியாளருக்கு ரூபா 150 இலட்சம் பெறுமதியான மிட்சுபிசி மொன்டெரோ SUV ரகமோட்டார் வண்டிகளை மாதாந்தம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

இது வரை 6 அதிஷ்டசாலி வாடிக்கையாளர்கள் மொன்டேரோ ரகவாகனங்களை வெற்றிப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமபலங்கொடை பிரதேசத்தினை சேர்ந்த, ஷானிகா ஸ்ரீமாலி, வாரியபொலவினை சேர்ந்த, ஜே.எம்.துஷாந்த ஜயலத், படல்கும்புர பிரதேசத்தினை சேர்ந்த ஆர்.எம். ரோஷான பிரியதர்ஷன மற்றும் நிட்டம்புவ பிரதேசத்தினை சேர்ந்த திருமதி. ஆர்.எம்.பீ.பி.பி. குமாரி, தனமல்வில பிரதேசத்தை சேர்ந்த திருமதி பீ.ஏ. குசுமாவதி மற்றும் பதவிய ஸ்ரீ திஸ்ஸபுர பிரதேசத்தினை சேர்ந்த திரு. ஆர்.டி நிமால் ஜயசிங்க ஆகியோர் கடந்த சீட்டிழுப்பில் மொன்டேரோ ரக கார்களை வெற்றி பெற்றிருந்தனர்.

மேலும் 2016ஆம் ஆண்டின் ஜூலை மாதத்திற்கான வெற்றியாளராக களுத்தறை பிரதேசத்தினை சேர்ந்த திரு விஜித் ரோட்ரிகோ பெற்றுகொண்டார். அத்துடன் 2016ம் ஆண்டில் மேலும் 5 வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“Cash Bonanza” களியாட்டம் மற்றும் இசை நிகழ்ச்சியுடன் பரிசளிப்பு விழாவும் குளியாபிட்டிய மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. அன்றைய தினம் இடம்பெற்ற இசைநிகழ்வின் பிரபல இசைக்குழுவான “சன் பிளவர்;” இசைக்குழுவினர் இசை வழங்கியிருந்ததுடன் இலங்கையின் முன்னனி இசைக்கலைஞர்கள் இவ்விசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

“Cash Bonanza”2016 பரிசளிப்புதிட்டத்தின் ஜூலை மாதத்தின் மாதாந்த சீட்டிழுப்பின் மாபெரும் வெற்றியாளராக களுத்தறை பிரதேசத்தினை சேர்ந்த திரு விஜித் ரோட்ரிகோ, மிட்சுபிசி மொன்டெரோ SUV ரகமோட்டார் வாகனத்தினை மொபிடெல் நிறுவனத்தின் பிரதான செயற்பட்டு அதிகாரி திரு. நளின் பெரேராவிடமிருந்து பெற்றுக்கொண்டார். 

இது வரை 7 வெற்றியாளர்கள் மொன்டரோ ரக வாகனத்தினை பரிசாக பெற்றுள்ளதுடன் “Cash Bonanza” 2016 பரிசளிப்புதிட்டத்தின் மூலம் இதுவரை 2,040 லட்சம் ரூபா பெறுமதி மிக்க பணப்பரிசுசுள் 394,056 மொபிடெல் வாடிக்கையாளர்களிடையே பகிர்தளிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இந் நிகழ்வினையொட்டி அன்றைய தினம் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் சிறுவர்களுக்கான Game zone மொபிடெல் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அனுபவிப்பதற்கான மொபிடெல் சேவைமத்திய நிலையமொன்று அமைக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

அத்துடன் மக்களின் நலன் கருதி அன்றைய தினம் வருகை தந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு 1000 மூக்குகண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மொபிடெலின் முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு மற்றும் ப்ரோட்பாண்ட் வாடிக்கையாளர்களும் இச்சீட்டிழுப்பில் பங்குபெறும் வாய்பினை பெற்றுகொள்ளமுடியும். ஒவ்வொரு 50 ரூபா பெறுமதியான ரீலோட், ரீசார்ஜ் அல்லது கட்டணப் பட்டியல் செலுத்தும் சகல வாடிக்கையாளர்களுக்கும் சீட்டிழுப்பில் கலந்துகொண்டு வெற்றி பெரும் வாய்ப்பு அதிகமாக கிட்டவுள்ளது. 

நாளாந்தம் மேற்கொள்ளப்படும் உடனடிசீட்டிழுப்புகளில் வெற்றிபெரும் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு வெற்றிபெற்ற தொகைக்கு சமமான “பேசும் காலம்”இலவசமாக வழங்கப்படுவதுடன், பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வெற்றியீட்டிய தொகை அவர்களது கட்டணப்பட்டியலின் மொத்த தொகையிலிருந்து கழிக்கப்படும்.

Game zone திட்டத்தின் வெற்றியாளர்கள் தொடர்பான விபரங்கள், மொபிடெல் வாடிக்கையாளர்சேவை இலக்கமான 071 27 55 777 மற்றும் தபால் மூலமாக மட்டுமே வெற்றியாளர்களுக்கு அறியத்தரப்படும். இதன் போது, வாடிக்கையாளர்கள் வெற்றியீட்டிய பரிசுகளுக்காக எவ்விதமான மேலதிகக் கட்டணமும் அறவிடப்படமாட்டாது.