நுவரெலியா “லவர்சிலிப்” நீர் வீழ்ச்சி பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 4

29 Aug, 2021 | 06:55 PM
image

நுவரெலியா பீட்ரூ தோட்டப்பகுதியை அண்மித்த பிதுருதலாகல பேணட் இயற்கை வனப்பகுதியில் உள்ள 30 மீட்டர் உயரமான லவர்சிலிப் இயற்கை நீர் வீழ்ச்சி பகுதியிலிருந்து நேற்று (28) மாலை ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாநகர பிரதேசங்களான ஆவாஎலிய, மஹிந்த மாவத்தை, லவர்சிலிப் தோட்டம், பீட்ரூ தோட்டம் மற்றும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை பிரதேசம் ஆகிய பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பிரதான தண்ணீர் தாங்கியில் இந்த சடலம் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் ஆவாஎளிய பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான  கொல்லா என்று அழைக்கப்படும் நமசிவாயம் அமிர்தலிங்கம் (வயது 42) என நுவரெலியா பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் நீர் தாங்கியின் இடுக்கில் சிக்கியுள்ள நிலையில் சடலத்தை மீட்கும் பணியை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த பிரதான தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.

அதேவேளை சடலம் கிடக்கும் பிரதான தாங்கியிலிருந்து மக்கள் குடிநீர் பாவனைக்காக வெளியேரும் தண்ணீரை உடனடியாக தடைசெய்துள்ள பொலிசார் பொது சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்றுள்ளனர்.

அத்துடன் இக் குடிநீர் பாவனையை தற்காலிகமாக நிறுத்தி கொள்ளுமாறு பிரதேச மக்களுக்கு விசேட அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வீடு உடைப்பு சம்பவம் ஒன்றில் நுவரெலியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின் நுவரெலியா நீதிமன்றம் பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44