புரெவிப் புயலால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக்கு விரைவில் நஷ்டஈடு

Published By: Gayathri

29 Aug, 2021 | 05:30 PM
image

புரெவிப் புயலினால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக்கான நஷ்டஈடுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன.

இதுதொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய நிலையில், நஷ்டஈடுகளை வழங்குவதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், புரெவிப் புயல் காரணமாக தொழில் உபகரணங்கள் பாதிக்கப்பட்ட மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள்,  நஷ்டஈட்டு தொகையினைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் வீசிய புரெவிப் புயலினால் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் தொழில் உபகரணங்கள் பகுதியளவிலும் முழுமையாகவும் பாதிக்கப்பட்டிருந்தன.

குறித்த பாதிப்புக்கள் தொடர்பான முழுமையான மதிப்பீட்டு அறிக்கையினை சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் ஊடாகப் பெற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் சுமார் 58 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியான நஷ்டஈட்டினை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றினை சமர்ப்பித்திருந்தார்.

குறித்த அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை, குறித்த நஷ்டஈட்டினை வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு வழங்குதற்கு அங்கீகாரம் அளித்த நிலையில், அவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே, புரெவிப் புயலினால் பாதிப்படைந்த வீடுகளை புனரமைப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்ளுக்கான உடனடி உலர் உணவு போன்ற நிவாரண நடவடிக்கைகளுக்காகவும் அரசாங்கத்தினால் சுமார் 36 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதியுதவி வழங்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைக்கு அமைவாக கடற்றொழில் உபகரணங்களுக்கான நஷ்டஈட்டு தொகை வழங்கி வைக்கப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56