கௌரிசங்கரி தவராசா எனும் நீதி தேவதை

Published By: Digital Desk 2

29 Aug, 2021 | 04:22 PM
image

எம்.எப்.எம்.பஸீர்

ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சிக்கு சவால்கள் விடுக்கப்படும்போது, உயர் நீதிமன்றில் என்றும் போராடும் ஒரு போராளி. ஊடகங்கள் முன்னிலையில் தோன்றாத,ஆனால் ஊடகங்களில் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்ற ஒரு பெயர். ஒடுக்கப்பட்டோரின், குரலற்றவர்களின்குரல்.

அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிராக தனது கணவருடன் சேர்ந்துநீதிமன்ற படிகளேறி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுத்த வழக்குகள் ஏராளம். 

பல சமயம், வழக்குகளின்  போது, தனது சேவை பெறுநருக்காகதானே மனுதாரராக முன்னின்று நீதிக்காக போராடிய ஓர் நீதி தேவதை. அந்த நீதி தேவதையை இன்றுஇழந்து தவிக்கிறது தேசம். 

ஆம், சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா. ஆசியாவில் தலை சிறந்த நூறுசட்டத்தரணிகளில் ஒருவரான கௌரிசங்கரி தவராசா, 35 வருட நீதிச் சேவையில் பயணித்துக்கொண்டிருந்தபோது,கடந்த 23 ஆம் திகதி இவ்வுலகை விட்டு பிரிந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(29) இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1955 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29ஆம் திகதி,  யாழ்.அளவெட்டியில் சண்முகசுந்தரம் - யமுனா தேவிதம்பதியினருக்கு மகளாக கௌரிசங்கரி பிறந்தார். யாழ்.மகாஜன கல்லூரியில் தனது பாடசாலைக்கல்வியை நிறைவு செய்த கௌரிசங்கரி, இலங்கைச் சட்டக் கல்லூரியில் தனது சட்டக் கல்வியைபூர்த்தி செய்து  1987 ஜூன் முதலாம் திகதி  உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக  சத்தியப் பிரமாணம் செய்தார்.  இதனைவிட, இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தின் சட்டஇளமானி பட்டத்தினையும்  பூர்த்தி செய்துள்ளார்.

சட்டக்கல்லூரியில் கல்வி கற்கும் வேளையில், சக சட்டத்துறை மாணவனாக இருந்தயாழ்.புங்குடு தீவை சேர்ந்த கே.வி.தவராசாவை மனம் விரும்பி திருமணம் செய்துகொண்டார்கௌரிசங்கரி தவராசா. 

தனது கணவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவுடன் இணைந்து, நீதி, நியாயம்,மனித உரிமைகள், ஜனநாயகம் சட்டத்தின் மீதான ஆட்சிக்காக சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரிதவராசா முன்னெடுத்த மகத்தான சேவைக்கு கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகங்கள் சாட்சிகளாகும். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-08-29#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13