நூற்றாண்டுகளாகத் தொடரும் தமிழின ஒடுக்குமுறை

Published By: Digital Desk 2

29 Aug, 2021 | 03:48 PM
image

சி.அ.யோதிலிங்கம்

தமிழர்கள் முதலாவது கட்டத்தில்இலங்கையர் என்ற அடையாள அரசியலையும், இரண்டாவது கட்டத்தில்  தமிழர்களுக்கு சமவாய்ப்பைக் கோருகின்ற இன அடையாளஅரசியலையும், மூன்றாவது கட்டத்தில் தமிழர் தாயகத்தை வரையறுத்து அதற்கு அதிகாரத்தைக்கோருகின்ற சமஷ்டி அரசியலையும், நான்காவது கட்டத்தில் இலங்கை அதிகாரக் கட்டமைப்பிலிருந்துவிலகுகின்ற தனிநாட்டு அரசியலையும் முன்னெடுத்தனர். தற்போது ஐந்தாவது கட்டத்தில் சுயநிர்ணயமுடையசமஷ்டி அரசியலை முன்னெடுக்கின்றனர்.

இலங்கைத்தமிழ் மக்களின் அரசியல் வரலாறு நீண்டது. 1833ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டகோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்துடன் இலங்கையின் நவீன வரலாறு ஆரம்பமாகியது. இதன்தோற்றத்துடன் தமிழ் மக்களின் நவீன அரசியல் வரலாறும் ஆரம்பித்து விட்டது எனலாம். தமிழ்மக்களினுடைய அரசியல் வரலாற்றை 1833 – 1921 வரையான காலகட்டம், 1921 – 1949 வரையான காலகட்டம்,1949 – 1968 வரையான காலகட்டம், 1968– 2009 வரையான காலகட்டம். 2009 க்கு பின்னரான காலகட்டம்என்று ஐந்து காலகட்டங்களாக பிரிக்கலாம். 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதியுடன் இனஒடுக்கு முறை ஆரம்பிக்கப்பட்டு நூறு வருடங்கள் நிறைவுக்கு வந்துள்ளன. 

1921ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி சேர்.பொன்.அருணாசலம் தமிழர் மாகஜனசபையைஉருவாக்கி இன அரசியலை ஆரம்பித்து வைத்தார். எனவே இந்நூற்றாண்டில் தமிழர் அரசியலை மீள்வாசிப்புசெய்து ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியமாகின்றது.

1833 – 1921 வரையான காலகட்டத்தில், சேர். முத்துக்குமாரசுவாமி, சேர்.பொன்இராமநாதன், சேர்.பொனஅருணாசலம், என்போர் இதில்முக்கியமானவர்களாவர். இக்காலகட்ட தமிழ் அரசியலை நகர்த்திய முக்கிய தலைவர்கள் இவர்கள்தான். இவர்களில் அருணாசலத்தினை பின்பற்றியே ஏ.ஈ.குணசிங்க போன்ற தொழிற்சங்கத்தலைவர்கள்இவரைப் பின்பற்றியே அரசியலுக்கு வந்தனர்.

1919ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்11ஆம் திகதி இலங்கையின் முதலாவது தேசிய இயக்கமான இலங்கைத்தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.இதன் முதலாவது தலைவராக அருணாசலம் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். இலங்கைத்தேசிய காங்கிரஸைஉருவாக்குவதற்காக பல்வேறு அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. இதன் அடிப்படையில்தமிழர்களின் முக்கிய அமைப்பாக இருந்த யாழ்ப்பாணச் சங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-29#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54