நாடு முழுவதும் 17,921 டெங்கு நோய்த் தொற்றுகள்

Published By: Vishnu

29 Aug, 2021 | 12:03 PM
image

இந்த ஆண்டு இதுவரையான காலப் பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 17,921 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

அவற்றில் சுமார் 39.1% டெங்கு தொற்றுகள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 1,161 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜூலை மாதத்தில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 3,292 ஆகும். 

கடந்த மாதத்தை விட இம் மாதம் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறிது குறைவு ஏற்பட்டிருந்தாலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் கடந்த ஜூலை 31 வரை டெங்கு தொற்று தொடர்பில் 10 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

டெங்கு நோய் தொடர்பான பின்வரும் அறிகுறிகள் காணப்படின் நோயாளியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும்

  • திரவ வகைகளைப் பருக முடியாதிருத்தல் (அடிக்கடி வாந்தயெடுத்தல்)
  • உணவு, பாண வகைகளை நிராகரித்தல்
  • கடுமையான தாகம்
  • நோயாளி சிறுநீர் கழிக்குமட தடவைகள் குறைவடைதல் ( 6 மணித்தியாலத்திற்கு கூடுதலான நேரத்திற்குள் சிறுநீர் வெளிவராமை)
  • கடுமையான வயிற்று வலி
  • தூக்க நிலைமை
  • நடத்தையில் மாற்றம் ஏற்படல்
  • சிவப்பு/ கறுப்பு/ கபில நிற வாந்தியெடுத்தல்
  • கறுப்பு நிற மலம் வெளியாதல்
  • குருதிப்பெருக்கு (முரசுகளிலிருந்து குருதிப்பெருக்கு, சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியாதல்)
  • தலைசுற்றுதல்
  • கைகால்கள் குளிரடைதல்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17