கிழக்கில் 2 ஆவது தடுப்பூசி வழங்காததால் 486 பேர் உயிரிழப்பு ; இதற்கு யார் பொறுப்பு – இரா. சாணக்கியன் 

Published By: Digital Desk 3

28 Aug, 2021 | 10:22 PM
image

இலங்கையில் சுகாதார அமைச்சில் கொரோனா தொடர்பான புள்ளிவிபரங்களுக்கும் கிழக்கு மாகாண சுகாதார பணிமனை புள்ளி விபரங்களுக்கும் இடையே பாரிய  முரண்பாடு எனவே இந்த மோசடி நடவடிக்கை எதற்காக அதேவேளை கிழக்கில் இரண்டாவது தடுப்பூசி வழங்காததால் கொரோனாவினால் உயிரிழந்த 486 பேரின் உயிரிழப்புக்கு யார் பொறுப்பு என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு மட்டு ஊடக மையத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

கிழக்கு மாகாணத்தில் பாரிய ஒரு சவாலான காலப்பகுதி நாங்கள் இருக்கின்றோம் உண்மையிலே இன்று அரசாங்கத்தின் செயற்பாடுகளில் இருந்து எங்களை நாங்கள் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

இலங்கையிலே ஒவ்வொரு மாவட்டதிலும் கொரோன தொற்றின் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்பாக சுகாதார  அமைச்சில்  ஆராய்கின்ற பிரிவு  இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது அலையில் நோயாளர்களின் எண்ணிக்கை 4,011 ஆகவும், கல்முனை பிராந்திய சுகாதார  சேவைகள் பிரிவில் 2,602 ஆகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் 2,906 ஆகவும் காட்டப்படுகின்றது.அதேவேளை கிழக்கிலுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்  தரவுகளை பார்த்தால் மட்டக்களப்பில் 15,883, கல்முனையில் 6,231, திருகோணமலையில் 8,617 ஆக காட்டப்படுகின்றது  எனவே இவ்வாறான மோசடியான நடவடிக்கை இதனை எவ்வாறு நம்பமுடியும். 

இவ்வாறு கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் இவ்வாறு என்றால் யுத்தத்திலே உயிரிழந்தவர்கள் யுத்தகாலத்திலே கொல்லப்பட்டவர்கள் புள்ளிவிபரங்களை எப்படி நம்புவது. இதே அரசாங்கம் தான் அந்த நேரத்திலே இருந்தது இவை அனைத்துக்கும் காரணம் என்ன? தடுப்பூசி நேரத்துக்கு வழங்காதது தான் உயிரிழப்புக்கு காரணம். அவ்வாறே உயிரிழந்தவர்களில் 88 வீதமானவர்கள் இரண்டு தடுப்பூசி கிடைக்காதவர்கள். அதில் இரண்டு தடுப்பூசியை பெற்ற 12 வீதமானோரே உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு இருக்கும்போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் இரண்டாவது தடுப்பூசி ஒன்று கூட கிடைக்கவில்லை அவ்வாறு திருகோணமலையிலும் ஒன்று கூட பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை  ஆனால் மட்டக்களப்பில் மாத்திரம் 32 வீதம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது 

ஜனாதிபதியின் நோக்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவேண்டும் டொலரை பாதுகாக்கவேண்டும் என மேல்மாகாணத்தில் இருக்கின்ற 30 வயதுக்கும் 60 வயதுக்குமிடையில் தடப்பூசி வழங்க வேண்டும் என்பதற்காக  அங்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றது ஆனால் கிழக்கில் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படவில்லை.

ஜனாதிபதி என்ன செய்தார் அனைத்துமக்களுக்கும்  பொதுவான சமனான தலைவராக இருக்கவேண்டும். கிழக்கு மாகாணத்தில் இருப்பவர்கள் மக்கள் இல்லையா இதில் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் வாழுகின்றனர் அவர்கள் மொட்டு கட்சிக்கு ஜனாதிபதிக்கும் வாக்களித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 211 பேரையும் திருகோணமலையில் 135 பேரையும், கல்முனையில் 140 பேரையும் இழந்துள்ளோம் இந்த உயிர்களுக்கு எல்லாம் யாரு பொறுப்பு இந்த முடக்கம் ஒரு போலியான முடக்கம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50