கொரோனாவினால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடுகள் வரிசையில் இலங்கை; மேலும் 212 மரணங்கள் பதிவு

Published By: Digital Desk 3

28 Aug, 2021 | 10:58 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றின் தீவிர நிலைமை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. நேற்று இரண்டாவது நாளாகவும் 200 க்கும் அதிக கொவிட் மரணங்கள் பதிவாகின.

இவ்வாறான நிலையில் மரணங்கள் மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் கருத்திற்கொள்ளும் போது, கொரோனாவினால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடுகள் வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார ஊழியர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் அதிகரித்துள்ளமை , ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை என்பன இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொற்று உச்ச நிலையை அடைந்திருந்த போது, அமுல்படுத்தப்பட்ட முடக்கத்தின் போது சட்டங்கள் எதிர்பார்த்தளவில் நடைமுறைப்படுத்தப்படாமை கவலையளிப்பதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று 212 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 109 ஆண்களும் 103 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இவர்களில் 173 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர். அதற்கமைய நாட்டில் அதற்கமைய கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,583 ஆக உயர்வடைந்துள்ளது.

இதே வேளை நேற்றைய தினம் மாலை வரை 4582 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் 4,21,557 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 3,55,394 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு, 57,580 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47