ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை நாட்டை முடக்கினால் 10 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்படும் - இலங்கை மருத்துவ சங்கம்

Published By: Digital Desk 2

28 Aug, 2021 | 06:39 PM
image

எம்.மனோசித்ரா

உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வு கூறலின்படி செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை நாடு முடக்கப்பட்டால் 7500 உயிர்களைக் காப்பற்ற முடியும்.

அதே போன்று ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை நாடு முடக்கப்படுமானால் மேலும் 10 000 உயிர்களை பாதுகாக்க முடியும் என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குனரத்ன தெரிவித்தார்.

டெல்டா திரிபின் புதிய மாறுபாடுகள் ஏனைய மாகாணங்களுக்கும் நிச்சயம் பரவக்கும் கூடும் என்று எச்சரித்துள்ள வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன , தற்போது நாடு செல்லும் வகையில் தொற்றினைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது சந்தேகத்திற்குரியதாகும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

டெல்டா பரவல் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கில் மக்கள் செயற்படும் விதம் தொடர்பில் தெளிவுபடுத்தும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கொழும்பில் நூறு வீதம் டெல்டா திரிபே பரவியுள்ளது. டெல்டா திரிபு மாற்றமடைந்து புதியதொரு மாறுபாடே கொழும்பில் அதிகளவில் பரவுகிறது. இந்த புதிய திரிபு ஏனைய மாகாணங்களுக்கும் பரவும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வுகூறலின்படி செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை நாடு முடக்கப்பட்டால் 7500 உயிர்களைக் காப்பற்ற முடியும்.

அதே போன்று ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை நாடு முடக்கப்படுமானால் மேலும் 10 000 உயிர்களை பாதுகாக்க முடியும். இதனை குறித்த எதிர்வுகூறல் அறிக்கை மூலம் அரசாங்கத்திற்கும் அறிவித்துள்ளோம் எனவும் அவர் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04