நாட்டை தொடர்ந்தும் முடக்கினால் அதன் விளைவை ஒட்டுமொத்த மக்களும் எதிர்கொள்ள நேரிடும் - சுசில் பிரேமஜயந்த

Published By: Digital Desk 2

28 Aug, 2021 | 04:28 PM
image

இராஜதுரை ஹஷான்

நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். சுகாதார காரணிகளை கருத்திற் கொண்டு நாட்டை தொடர்ந்தும் முடக்கினால் பொருளாதாரம் பாதிக்கப்படும். அதன் விளைவை ஒட்டுமொத்த மக்களும் எதிர்கொள்ள நேரிடும் என  தொலை நோக்கு கல்வி அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரு சில பகுதிகளில் குறிப்பாக கொழும்பில் பொது மக்கள் செயற்படும் விதம்  அதிருப்தியளிக்கிறது. வீதிகளில் காரணமின்றி நடமாடுவதையும், கூட்டமாக நின்று  உரையாடுவதையும் காண முடிந்தது. பாதுகாப்பு தரப்பினரால் இவ்வாறான செயற்பாடுகளை கண்டிக்க முடியாது.

கொவிட் தாக்கத்தினால் இதுவரையில் 27 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மரணித்துள்ளனர். தற்போதைய நெருக்கடியான நிலையில் அனைத்து தரப்பினரும் தங்களின் சுய பாதுகாப்பிற்கே முதலில் முன்னுரிமை வழங்குவார்கள். கொவிட் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை.நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே தற்போதைய நெருக்கடியான நிலையை வெற்றிக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07