கொழும்பில் டெல்டா திரிபானது புதிய திரிபாக மாற்றடைந்து வேகமாக பரவுகின்றது - ஆய்வில் புதிய தகவல்

Published By: Digital Desk 2

28 Aug, 2021 | 02:14 PM
image

எம்.மனோசித்ரா

நாட்டில் இனங்காணப்பட்ட டெல்டாவின் 3 மரபணு திரிபுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் ஒவ்வொரு மரபணு திரிபும் படிப்படியாக பிரதான திரிபாக மாறிக் கொண்டிருப்பது இனங்காணப்பட்டது. 

மிகக்குறுகிய காலத்திற்குள் அசல் டெல்டா திரிபானது புதிய திரிபாக மாற்றமடைந்து விரைவாக பரவி வருகின்றமையும் இதன் மூலம் உறுதியாகியுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

டெல்டா திரிபு தொடர்பான புதிய அறிக்கையின் படி ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் டெல்டா திரிபானது கொழும்பை அடிப்படையாகக் கொண்டு வேகமாக பரவலடைந்துள்ளது.

அதற்கமைய கொழும்பில் 100 வீதம் டெல்டா பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

கடந்த வாரம் நாட்டில் டெல்டாவின் 3 மரபணு திரிபுகள் இனங்காணப்பட்டிருந்தன. இவை தொடர்பில் தொடர் ஆய்வுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த ஆய்வின் முடிவு தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கொவிட் திரிபுகளை இனங்காண்பதற்கு எமக்கு நாடளாவிய ரீதியிலிருந்து மாதிரிகள் கிடைக்கப் பெறும். இவ்வாறு மாதிரிகள் கிடைக்கப் பெற்றவுடன் பி.சி.ஆர். பரிசோதனை வழமையைப் போன்று மேற்கொள்ளப்படும்.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்களில் பரிசோதனை அறிக்கையைப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் போது மரபணு திரிபுகளை இனங்காண்பதற்கு பிரத்தியேக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட அல்பா திரிபு , இந்தியாவில் இனங்காணப்பட்ட டெல்டா திரிபு உள்ளிட்டவற்றுக்கு உரித்தான மாறுபாடுகள் உள்ளன.

அந்த மாறுபாடுகளை கண்டறிவதற்காகவே மேற்கூறப்பட்ட பிரத்தியேக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதன் போது கிடைக்கப் பெறும் அறிக்கைக்கு அமையவே தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை தீர்மானிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14