இலங்கை – ஆஸி அணிகளுக்கு இடையில் நடந்து முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 தொடரில் ஆஸி அணியின் சகலதுறை வீரர் மெக்ஸ்வெலின் அபாரமாக துடுப்பாட்டத்தால் ஐ.சி.சி.யின் இருபதுக்கு 20 சகலதுறை தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக முதல் போட்டியில் ஆட்டமிழகக்காமல் 145 ஓட்டங்களையும், 2 ஆவது போட்டியில் 66 ஓட்டங்ளை பெற்றார். 

மெக்ஸ்வெல் 388 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சாஹிப் அல் ஹசன் 346 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்திற்கு பின்னடைவினை சந்தித்துள்ளார். 

அப்ரிடி 319 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.