டெல்டா தொற்று ஏற்பட்டால் எந்த அறிகுறியும் இல்லாமல் இருதய நோய் ஏற்படும் சாத்தியம் - வைத்திய நிபுணர் கோட்டாபய ரணசிங்க

Published By: Digital Desk 3

27 Aug, 2021 | 02:36 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளாகி எந்த நோய் அறிகுறிகளும் வெளிப்படுத்தாமலே இருதய நோய்களுக்கு ஆளாகுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது.

அவ்வாறான கொவிட் தொற்றுக்குள்ளான இருபது  நோயாளர்களுக்கு கடந்த வாரங்களில் சத்திர சிகிச்சை மேற்கொண்டோம் என கொழும்பு தேசிய வைத்தியசாலை மார்ப்பக சிகிச்சை பிரிவு விசேட வைத்திய நிபுணர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்தார்.

கொவிட் டெல்டா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறித்து தெளிவுபடுத்துகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இருதய நோய்களுக்கு ஆளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அதிகமானவர்கள் குறைந்த வயதினர்கள். பொதுவாக இருதய நோய்க்கு காரணமாக அமையும் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ராேல், நீரிழிவு போன்ற நோய்களுக்கு ஆளாகாமல், இருதய நோய்க்கு ஆளாகியவர்களாகும்.

அதனால் இவ்வாறான இருதய நோய்  அறிகுறிகள் யாருக்காவது வெளிப்பட்டால், அவர்களை விரைவாக வைத்தியசாலைக்கு அனுமதிப்பது நல்லது.

அத்துடன் கொவிட் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, இருதய நோய்க்கு ஆளாகும் நோயாளர்கள் தொடர்பில் விசேட ஆய்வொன்றை தற்போது நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16