சுகாதாரத்துறையை சாராதோர் கொவிட் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் - வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம்

Published By: Digital Desk 3

27 Aug, 2021 | 01:47 PM
image

(எம்.மனோசித்ரா)

சுகாதாரம் சார்ந்த தொழிநுட்ப அறிவைக் கொண்டிராத நபர்கள் கொவிட் முகாமைத்துவத்தை பாதிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். 

இவ்வாறு எழுமாற்றாக கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருப்பதால் மக்களின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறாது.

மக்களின் நடமாட்டம் அதிகரித்து முடக்கத்தால் எதிர்பார்த்த பிரதிபலனையும் பெற முடியாமல் போகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படும் போது மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் அசமந்த போக்குடன் செயற்படக் கூடும். 

மக்கள் இவ்வாறு செயற்பட ஆரம்பித்தால் அது கொவிட் தொற்றின் முகாமைத்துவத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். இவ்வாறான ஒத்துழைப்புக்கள் இன்றி எம்மால் பயணக்கட்டுப்பாடுகளை சரியான முறையில் முகாமைத்துவம் செய்ய முடியாது. எனவே பயணக்கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் சுட்டிக்காட்டினார்.

கொவிட் தொற்று என்பது ஒரு சாதாரண காய்ச்சல் மாத்திரமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை மக்களை தவறான முறையில் வழிநடத்தக் கூடுமல்லவா என்பது தொடர்பில் வினவிய போதே வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47