இலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா மரணங்கள் ! தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள் ! நேற்று 209 பேர் பலி 

Published By: Digital Desk 4

26 Aug, 2021 | 10:36 PM
image

 (எம்.மனோசித்ரா

நாட்டில் தற்போது உபயோகிக்கப்படுகின்ற கொவிட் தடுப்பூசிகள் தொடர்பில்  பஹரைனில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் தகவலை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் , கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் மரண வீதமானது , தடுப்பூசி பெற்றுக் கொண்டோரின் வீதத்தை விட அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து பேராசிரியர் நீலிகா மலவிகே அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்,

சினோபார்ம், பைசர் , கொவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளின் வெற்றி குறித்து மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வின் அடிப்படையில் , சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் மரண வீதமானது குறித்த வயதெல்லையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களின் மரணத்தை விட 8 மடங்கு அதிகமாகும்.

அதே போன்று பைசர் , கொவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரையில் மரணங்கள் பதிவாகவில்லை. 

50 வயதிற்கும் குறைவான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாமல் உயிரிழந்தவர்களின் மரண வீதமானது , சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்று உயிரிழந்தவர்களின் மரண வீதத்தை விட மூன்று மடங்கு அதிகமானதாகும்.

சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மரண வீதம் 0.46 சதவீதமாகும். 

இதே போன்று பைசர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மரண வீதம் 0.15 என்ற மிகக்குறைந்த சதவீதமாகும். 

மேலும் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மரண வீதம் 0.03 சதவீதம் மாத்திரமேயாகும்.

டெல்டா தொற்றுக்கு முன்னர் மற்றும் டெல்டா தொற்று ஏற்பட்டதன் பின்னரான காலப்பகுதிகளில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத நபர்கள் தொடர்பில் அவதானிக்கும் போது மேற்குறிப்பிட்ட 4 தடுப்பூசிகளும் மரணங்களின் வீதத்தை குறைத்துள்ளமை உறுதியாகியுள்ளது.' என்று குறிப்பிட்டுள்ளார். 

எனவே எதிர்வரும் காலங்களில் பதிவாகக் கூடிய மரணங்களின் வீதத்தை குறைப்பதற்கு தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது இன்றியமையாதது என்று சகல சுகாதார தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் 209 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. 

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 108 ஆண்களும் 101 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 163 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர். அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,157ஆக உயர்வடைந்துள்ளது.

இதே வேளை இன்றைய தினம்  4602 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் 412 370 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 351 069 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 53 353  தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11