பிளாஸ்டிக் கழிவுகளை முகாமைத்துவம் செய்ய தேசிய செயற்றிட்டம்

Published By: Gayathri

26 Aug, 2021 | 01:37 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பிளாஸ்டிக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக சுற்றாடற்றுறை அமைச்சு  2021 தொடக்கம் 2030 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்காக பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவ தேசிய செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

சுற்றாடற்றுறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர்  அனில் ஜாசிங்கவினால்  இந்த தேசிய செயற்றிட்டம் தயாரிக்கப்பட்டு சுற்றாடற்றுறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக்  கழிவு முகாமைத்துவத்துவ  தேசிய செயற்றிட்டத்திற்காக  ஜப்பான் அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் செயற்றிட்டம், சுற்று சூழல் மற்றும் சூழல் தொழிநுட்பத்திற்கான நிறுவனம் ஆகியன ஒத்துழைப்பு வழங்குகின்றன. 

விசேடமாக '3 ஆர்' செயற்றிட்ட கொள்கைக்கு அமைய  பிளாஸ்டிக் பாவனையை குறைத்தல், பிளாஸ்டிகை மீள்சுழற்சி செய்தல் மற்றும் மீள் பாவனை  ஆகிய முறைமைக்கு அமைய பிளாஸ்டிக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வது தேசிய செயற்றிட்டத்தில் இலக்காக காணப்படுகிறது.

ஒரு வருடத்திற்கு மாத்திரம் சுமார் 3 இலட்சம் மெற்றிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

அத்துடன்  நாட்டுக்குள் மாத்திரம் ஒரு நாளைக்கு 10,768 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் சூழலுக்கு அகற்றப்படுகின்றன. 

அத்துடன் உள்ளூராட்சிமன்ற சபைகளினால் ஒரு நாளைக்கு மாத்திரம் சுமார் 3458 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் சேமிக்கப்படுகின்றன.

இதற்கமைய நாட்டில்  நாளாந்தம்  50 சதவீதமான பிளாஸ்டிக் கழிவுகள் முறையற்ற வகையில் சுற்றுச்சூழலில் கலக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். 

10 வருட காலத்திற்குள் பிளாஸ்டிக்வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது  தேசிய செயற்றிட்டத்தின் பிரதான எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33