ஆசியாவில் இந்தியா ஒரு முக்கிய பிராந்தியமாக இருக்கும் - இந்திய மத்திய வர்த்தக இணை அமைச்சர் அனுப்பிரியா

Published By: Digital Desk 3

26 Aug, 2021 | 01:10 PM
image

2021-22 ஆம் ஆண்டில் 46 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்குடன் இந்தியா ஆசியாவில் ஒரு முக்கியமான பிராந்தியமாக இருக்கும் என இந்திய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் தெரிவித்துள்ளார்.

இது நிதியாண்டிற்கான இந்தியாவின் உலகளாவிய ஏற்றுமதி இலக்கை 400 பில்லியன் அமெரிக்க டொலர்களை பூர்த்தி செய்ய உதவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆசியாவின் வளர்ச்சியின் முக்கிய இயந்திரம் வர்த்தகம் என படேல் தெரிவித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சகம் மற்றும் வர்த்தகத் துறையின் ஆதரவுடன் பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு சபை (EEPC) ஏற்பாடு செய்த “இந்தியா-ஆசியான் பொறியியல் கூட்டாண்மை உச்சிமாநாட்டை” ஆரம்பித்து வைத்து பேசுகையிலே மேற்கண்டவாறு பட்டேல்  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

உச்சிமாநாட்டில்  பொறியியல் துறையுடனான ஒத்துழைப்பு தொடர்பில்  கவனம் செலுத்தப்பட்டது.

வர்த்தக ஏற்றுமதியில் பொறியியல் ஏற்றுமதி நான்கில் ஒரு பங்கு ஆகும், மேலும் அனைத்து ஏற்றுமதி துறைகளிலும் மிகப்பெரிய அந்நிய செலாவணி ஈட்டித்தருவதாகவும், பொறியியல் ஏற்றுமதியின் செயல்திறன் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

ஆசியாவில், உலகளாவிய பொறியியல் ஏற்றுமதியில் 15 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கைக் இந்தியா கொண்டுள்ளது. இந்த துறையில் 2021-22 க்கு 16 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு கவனம் செலுத்த ஒரு முக்கிய பிராந்தியமாக இருக்கும்.

இந்தியா சனத்தொகை, வலுவான சேவை மற்றும் உற்பத்தித் துறைகளில் பெரும் பங்கைக் கொண்டுள்ளதாகவும், அதிக ஒத்துழைப்புக்காக பல நிரப்புதல் துறைகள் மற்றும் பொருட்கள் கிடைக்கின்றன என அமைச்சர் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த பொருளாதாரத்துடன் அமெரிக்க டொலர் 5.8 ரில்லியன், இந்தியா மற்றும் ஆசியான் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகள் உள்ளன என அவர் சுட்டிக்காட்டினார்.

அந்நிய நேரடி முதலீட்டுக்கு இந்தியாவை இன்னும் கவர்ச்சிகரமான இடமாக மாற்ற அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வர்த்தக அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஒரு பிராந்தியமாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வட அமெரிக்காவிற்குப் பிறகு இந்தியா பொறியியல் தயாரிப்புகளின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி இடமாகும்.

ஆசியாவின் உறுப்பு நாடுகளில், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகியவை இந்திய பொறியியல் தயாரிப்புகளுக்கான முக்கிய ஏற்றுமதி இடங்களாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44