உறவினரின் இறப்புக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்திய விவசாயி

Published By: Digital Desk 3

26 Aug, 2021 | 01:00 PM
image

இறந்தவர்களுக்கு  நேரில் சென்று அஞ்சலி செலுத்துவது எமது வழக்கம் . ஆனால் இந்த கொரோனா பெருந்தொற்றினால் அதற்கு தற்போது வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

கொரோனா தொற்றினால்  இறந்தாலோ அல்லது வேறு நோய்களால் இறந்தாலோ நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாத காலமாக இது மாறிவிட்டது.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் விவசாயியான ஜாக்சனுக்கும் தனது உறவினர் ஒருவர் இறந்தமையால் நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாமல் போயுள்ளது.

நியூ சவுத் வேல்ஸில் இருந்து 400 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள குயின்லாந்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் சிகிச்சை பெற்று வந்த ஜாக்சனின் உறவினரான டெபி உயிரிழந்தார்.

பயணக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தமையால் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரிஸ்பேனுக்கு பயணம் செய்வதற்கு முடியாமல் போனது.

எனவே அவர் தனது அன்பை வெளிப்படுத்த தான் வளர்த்த ஆடுகளை கொண்டு இதய வடிவம் அமைத்து அஞ்சலி செலுத்த முடிவு செய்தார்.

மேய்ச்சல் நிலத்தில் தானியங்களை வைத்து இதய வடிவத்தை முதலில் அமைத்தார். இதையடுத்து ஆயிரக்கணக்கான ஆட்டு மந்தைகளை அவர் விடுவித்தபோது அவை பாய்ந்து ஓடி  தனியங்களால் வரைந்த வடிவத்தை நிரப்பின.

அதனை ட்ரோன் கமரா மூலம் காணொளி எடுத்து இணையத்தில் பகிர்ந்த  பின் அது வைரலாகியது.

இது தொடர்பில் விவசாயியான ஜாக்சன்  கருத்து தெரிவித்துள்ளதாவது, 

"நான் அங்கு சென்று அவரை (டெபி) பார்க்கவோ, பிரியாவிடை சொல்லவோ அல்லது இறுதி சடங்கிற்கு செல்லவோ வழி இல்லை. அதனால் நான் நம்பிக்கையற்றவனாக, உதவியற்றவனாக உணர்ந்தேன் - என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் விவசாயம் செய்தமையால், நான் ஒரு பெரிய இதய வடிவத்தை தரையில் அமைக்க முடிவு செய்தேன். அவருடன் ஒப்பிடுகையில் இது மிகவும் உன்னதமானது" என தெரிவித்துள்ளா்ர.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right