நாட்டில் கொரோனாவுக்கு மேலும் 198 பேர் பலி : தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது

Published By: Digital Desk 4

25 Aug, 2021 | 09:58 PM
image

நாட்டில் நேற்று (24.08.2021) கொரோனா தொற்றால் மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், 30 வயதுக்குட்பட்டவர்களில்,  ஆண் ஒருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 37 ஆண்களும், 14 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 81 ஆண்களும். 65 பெண்களுமாக 198 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,948 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 4 இலட்சத்தைக் கடந்துள்ளது. 

கடந்த மூன்று நாட்களாக நாளொன்றில் 4000 இற்கும் அதிக தொற்றாளர்கள் பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது மொத்த தொற்றாளர் எண்ணிக்கையும் இவ்வாறு 4 இலட்சத்தைக் கடந்துள்ளது.

 கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் சுமார் 12 000 இற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு , 400 இற்கும் அதிக மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதேவேளை இன்று இரவு 10 மணிவரை 4,472 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 

அதற்கமைய இது வரையில் 4077 57 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 348 930 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 49 995 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31