ஹம்பாந்தோட்டை பதகிரிய பகுதியில் நெல் மூடைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டை பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பெற்றோர், தமது 20 வயதுடைய மகனை ஹம்பாந்தோட்டை பொலிஸாரே கைது செய்து அவர்களின் பாதுகாப்பில் வைத்திருந்தனர்.

ஆனால் மகன் தற்போது காணாமல் போயுள்ளதாக கூறுகின்னர். இதுவரை மகன் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது ஆணைக்குழு விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளது.