இலங்கையில் இரண்டு பங்காளித்துவங்களை அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது

Published By: Digital Desk 3

26 Aug, 2021 | 09:56 AM
image

இலங்கையில்  கொவிட்-19 பொருளாதார மீட்சிக்கு உதவும் முகமாக அவுஸ்திரேலிய  அரசாங்கத்தின் வியாபார பங்காளித்துவங்கள் தளத்தின் (BPP) பிரகாரம் இரண்டு புதிய பங்காளித்துவங்களை இலங்கைக்கான பிரதி உயர் ஸ்தானிகர் அமன்டா ஜூவெல் நேற்று  புதன்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

BPP என்பது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பிரதான முன்முயற்சிகளில் ஒன்றாகும். நிலைபெறு தன்மையுள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பபை ஊக்குவிக்கும் அதே சமயத்தில் வியாபாரத்திற்கான வணிக வருமானங்களை உறுதிப்படுத்துகின்ற வியாபாரங்களுடனான பங்காளித்துவங்களுக்கு அது உதவுகின்றது.

தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் கொவிட்-19 மூலம் மிகக் கடுமையான பொருளாதார பாதிப்பிற்கு உள்ளான நாடுகளுள் இலங்கையும் ஒன்றாகும்.

இலங்கையில்  ஏற்பட்ட மோசமான பொருளாதார வீழ்ச்சியினால் சிறிய வியாபாரங்கள் முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் பெண்களுக்குக் கூடுதலாக பாதிப்பு ஏற்பட்டது என்று பிரதி உயர் ஸ்தானிகர் ஜூவெல் தெரிவித்தார்.

கொவிட்-19 இலிருந்து இலங்கை பொருளாதார ரீதியாக மீட்சி பெறுவதில் தனியார் துறைக்கு முக்கிய பங்கு உண்டு. வினைத்திறன் பங்கேற்பு என்பவற்றில் தனிாயார் துறையின் முக்கியமான பங்களிப்பு  பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலும்.

இலங்கையில் வியாபாரத்தினால் உந்தப்படும் பொருளாதார வளர்ச்சிக்கும் கொவிட்-19 இலிருந்தான மீட்சிக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம் வியாபாரப் பங்காளித்துவங்கள் தளத்தின் ஊடாக  உதவுகின்றது என்றும் அவர் கூறினார்.

வியாபார பங்காளித்துவங்கள் தளத்தின் கீழ் இலங்கையில் கொவிட்-19 மீட்சிக்காக உதவி வழங்கப்படவிருக்கும் பங்காளித்துவங்கள். பின்வருமாறு ;

  • டீசம் அன்ட் மோட்டார் என்ஜினிரிங் (DIMO) பி.எல்.சி பண்டங்களின் போக்குவரத்துக்காக சிறிய தனிப்பட்ட வணிக வாகனங்களைப் பயன்படுத்துபவர்களையும் பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுததர அளவு SME)  தொழில் முயற்சிகளையும் இணைக்கும் விதத்தில் IDIMO நிறுவனத்தினால்  வடிவமைக்கப்பட்ட  Pickmyload என்ற வலைத்தளச் செயலித் தளத்துடனான பங்காளித்துவம் இதுவாகும். தற்போதுள்ள வியாபாரத்தை கிராமிய மற்றும் நகரை அடுத்த பகுதிகளிலுள்ள சிறய வியாபார உரிமையாளர்கள் மற்றும் சுயாதீன வாகான சாதிகளுக்கு நன்மையளிக்கும் நோக்குடனானபுதிய சந்தை கூறாக விரிவுப்படுத்துவதற்கு இப் பங்காளித்துவம் இடமளிக்கும் வசதி வழங்கல் (logistic support) துறையில் ஈடுப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் சமுகத்தினரின் பங்கேற்பை ஊக்கவிக்கவும் பெண்களின் தலைமையிலான வியாபாரங்கள் மற்றும் தொழில் முயற்சிகளுக்கு வசதியான தளம் ஒன்றை அணுகுவதற்கான வாய்ப்புகளை வழங்கவும் இது உதவும்.

  • WEBXPAY கொடுப்பனவு நுழைவாயில் சேவைகளை வழங்குவதன் மூலம் சிறிய விாயாபாரங்களையும் நுகர்வோர்களையும் இணைக்கும் டிஜிட்டல் கொடுப்பனவுத் தளத்துடனான பங்காளித்துவம் இதுவாகும்.இலங்கையின் கிராமப்புங்களிலுள்ள  நுண்ணளவு  சிறய மற்றும் நடுத்தர அளவு வு (MSME) தொழில் முயற்சிகளுக்கான Webxpay சேவைகளின் விரிவாக்கவும் வழிநடத்தவும் இது இடமளிக்கும் நுண்ணளவு சிறிய மற்றும் நடுத்தர அளவு (MSME) தொழில் முயற்சிகள் தம்மை முறைபடி  பதிவு செய்யவும் தமது ஒன்லைன் பிரசன்னத்தை அபிவிருத்தி செய்யவும் தமது விாயாபார செயற்பாடுகளை நிலைத்திருகக்கச் செய்வதற்கு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை திட்டமிடவும் பொருளதார  அதிர்ச்சிகளுக்கு தாக்குப்பிடிக்கவும் இது எதுவும். நுண்ணளவு சிறய மற்றும் நடுத்தர அளவு (MSME) தொழில் முயற்சிகள் ஒன்லைனில் செயற்படுவதன் மூலம்  கொவிட்-19 நிலைமைகளில் வர்த்தகத்தை தொடர முடிவதுடன், எதிர்கால டிஜிட்டல் கொருளாதாரத்தில் தமது போட்டி நிலையை வலுப்படுத்தவும் முடியும்.

கொவிட்-19 சூழலில் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவ அவுஸ்திரேலியா தன்னை அர்ப்பணித்தள்ளது. பரந்த அடிப்படையிலான தனியார் துறையின் தலைமையிலான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முகமாக அவுஸ்திரேலியா இலங்கையின் மீது செலுத்தும் விசேட  கவனத்தை மேற்குறிப்பிட்ட இரண்டு புதிய பங்காளித்தவங்களும் பிரதிபலிக்கின்றன. அதிகரித்த ஒத்தழைப்பு மற்றும் பங்காளித்தவத்தின் மூலம் வியாபாரங்கள் நிலைப்பெற தன்மையுள்ள சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தவும் வணிக வருமானத்தை ஈட்டவும் முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58