ஜேர்மனியில் பீட்சா டெலிவரி செய்யும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர்

Published By: Vishnu

25 Aug, 2021 | 02:46 PM
image

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஜேர்மனியில் பீட்சா டெலிவரி செய்யும் நபராக பணியாற்றி வருகிறார். 

ஆப்கானிஸ்தானில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பணியாற்றிய சையத் அஹ்மத் ஷா சதத் ஜேர்மனியில்  பீட்சா டெலிவரி செய்யும் புகைப்படங்கள் அல்-ஜசீரா அரேபியா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

இந் நிலையில் டெலிவரி போயாக அவரை காட்டும் புகைப்படங்கள் புதன்கிழமை சமூக ஊடகங்களில் வைரலானது.

சையத் அஹ்மத் ஷா சதத், ஸ்கை நியூஸ் அரேபியாவுடன் இது தொடர்பில் பேசியதாகவும், சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்கள் அவருடையது என்பதை உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.

சையத் அஹ்மத் ஷா சதாத் அஷ்ரப் கானி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தில் 2018 இல் அமைச்சரவை அமைச்சராக சேர்ந்தார். 

அவர் ஆப்கானிஸ்தான் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார், பின்னர் 2020 இல் பதவியை இராஜினாமா செய்தார். 

அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜேர்மனிக்கு சென்ற பின்னர்  லீப்சிக்கில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right