நீர்கொழும்பில் கொவிட் மரண வீதத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட வேலைத்திட்டம்

Published By: Digital Desk 3

25 Aug, 2021 | 12:13 PM
image

(எம்.மனோசித்ரா)

நீர்கொழும்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொவிட்-19 தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தற்போதுள்ள நிலைமை என்ற தொடர்பில் விசேட கலந்துரையாடல் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தலைமையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினர் கலந்து கொண்டிருந்தனர். நீர்கொழும்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொவிட் மரணங்களின் வீதத்தினை குறைப்பதற்காகவும் , கொவிட் வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை மேலும் வலுப்படுத்துவதற்காகவும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் இதன் போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

குறிப்பாக 2 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களை பாதுகாப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய 65 வயதுக்கு மேற்பட்டோரில் வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ள போது சிகிச்சை பெறுவதில் காணப்படுகின்ற குறைபாடுகள் காணப்பட்டால் அவர்களை துரிதமாக வைத்தியசாலைகளில் அனுமதிப்பது குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.

நீர்கொழும்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 24 மணித்தியாலங்களும் இயங்கும் கொவிட் தகவல் மத்திய நிலையத்திற்கு கிடைக்கப் பெறும் தகவல்களில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமையளித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு இதன் போது தீர்மானிக்கப்பட்டது.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு இதன் போது தீர்மானிக்கப்பட்டது. இதற்கு தேவையான போக்குவரத்து வசதிகள் நீர்கொழும்பு நகரசபையால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கு நாட்டின்...

2024-03-28 14:20:44
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59