கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படுமென சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Published By: Gayathri

25 Aug, 2021 | 12:21 PM
image

'முத்தமிழறிஞர்' கலைஞர் அவர்களுக்கு 39 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது...

'சட்டமன்றப் பேரவை விதி எண் 110ன் கீழ் இந்த அரசின் முதல் அறிவிப்பினை உங்கள் அனுமதியுடன் இந்த அவைக்கு அறிவிக்க விரும்புகிறேன். 

விதி எண் 110 கீழ் அறிவிக்கும் முதல் அறிவிப்பே 'தமிழினத் தலைவர்', 'முத்தமிழறிஞர்', 'எண்பது ஆண்டுகாலம் இந்த தமிழ் சமுதாயத்திற்கு உழைத்த போராளி' கலைஞர் அவர்களது புகழுக்கு பெருமை சேர்க்கும் அறிவிப்பாக அமைந்துள்ளதை நினைத்து நான் மட்டுமல்ல இந்த அரசே பெருமைப்படுகிறது.

'இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி', 'கனவு மாநிலத்தையே உருவாக்கிய மகத்தான சிற்பி', 'அரை நூற்றாண்டு காலத்தின் நிரந்தர தலைப்பு செய்தியாக இருந்த முத்தமிழறிஞர்' கலைஞர் அவர்களுக்கு 39 கோடி ரூபாய் செலவில் நவீன விளக்கப்படங்களுடன் சென்னை காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் காணி பரப்பளவில் நினைவிடம் அமைக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

திமுக அரசு பதவியேற்றதும் சட்டப் பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்பட்டிருக்கும் முதல் அறிவிப்பு இது என்பதாலும், கலைஞரின் நினைவிடத்தின் மாதிரி தோற்றப் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பதாலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59