நாட்டில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர். 

வெல்லவாய பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நகரை அண்மித்த பிரதேசமொன்றில் வீட்டில் பதுங்கி இருந்த போது பொலிஸாரால் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொனராகல, வெல்லவாய உட்பட நாட்டில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்களுடன் இவர்கள் தொடர்புபட்டுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது தெரிய வந்துள்ளது. 
கைது செய்துள்ள அனைவரும் வெள்ளவாய, மொனராகல, எம்பிலிபிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். 
கைது செய்யப்பட்ட ஐவரும் மொனராகலை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.


(செல்வராஜர்)