'முன்னோக்கி நகர்வோம்', 'எங்களுக்கு சிறகுகள் உள்ளன' - டோக்கியோ 2020 பராலிம்பிக் ஆரம்பம்

25 Aug, 2021 | 07:01 AM
image

(நெவில் அன்தனி)

'முன்னோக்கி நகர்வோம்' என்ற எண்ணக்கருவுடனான ஒட்டுமொத்த தகவலை உலகுக்கு வழங்கும் டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழா 'எங்களுக்கு சிறகுகள் உள்ளன' என்ற தொனிப் பொருளைக் கொண்ட தொடக்க விழா வைபவத்துடன் நேற்று செவ்வாய்க்கிழமை (24) இரவு ஆரம்பமானது.

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டரங்கில் 68,000 வெற்று ஆசனங்களுடன் நடைபெற்ற தொடக்க விழாவின்போது பராலிம்பிக் விளையாட்டு விழாவை ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

வெள்ளை முகக்கவசத்துடன் மேடையில் பிரசன்னமான பேரரசர் நருஹிட்டோ 'டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவை நான் தொடக்கிவைக்கின்றேன்' என பிரகடனப்படுத்தினார்.

தொடக்கவிழாவின் போது ஜப்பானின் 3 மாற்றுத்திறனாயிகள் சக்கர இருக்கையில் அமர்ந்தவாறு டோக்கியோ 2020 பாரலிம்பிக் தீபத்தை ஏற்றிவைத்தனர்.

கொரோனா தொற்று நோய் காரணமாக ஒரு வருடத்தால் பிறப்போடப்பட்டு நேற்று ஆரம்பமான பராலிம்பிக் விளையாட்டு விழாவின் 16 ஆவது அத்தியாயத்தில் அகதிகள் பராலிம்பிக் அணி உட்பட 162 அணிகளைச் சேர்ந்த 4,400 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் 22 வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவுளளனர்.

'எங்களுக்கு சிறகுகள் உள்ளன' என்ற தொணிப் பொருளில் நடத்தப்பட்ட ஆரம்ப விழாவில் ஒரு மினி விமான நிலையம் அமைக்கப்பட்டு ஒற்றை இறக்கையுடனான விமானம் வானை நோக்கிப் பறப்பதைப் போன்ற அற்புத காட்சியை 13 வயதுடைய மாற்றுத்திறனாளி சக்கர இருக்கையில் அமரந்தவாறு செய்துகாட்டினார்.

தன்னார்வத்தொண்டர் ஒருவர் ஆப்கானிஸ்தானின் தேசிய கொடியை ஒற்றுமையின் அடையாளமாக அணிவகுப்பின்போது அரங்குக்குள் கொண்டு சென்றார். 

இவ் விளையாட்டு விழாவில் ஆப்கானிஸ்தான் உட்பட 21 நாடுகளுக்கு பங்குபற்ற முடியாமல் போயுள்ளது.

ஆரம்ப விழாவில் 3,400 பராலிம்பியர்களுடன் அணிகளின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழா மாற்றத்துக்கான மேடையாக அமையக்கூடும் என தொடக்க விழாவில் பேசிய சர்வதேச பராலிம்பிக குழுவின் தலைவர் அண்ட்றூ பார்சன்ஸ் தெரிவித்தார்.

'இந்த நாள் நடக்குமா என பலர் சந்தேகித்தனர். இன்னும் பலர் இது சாத்தியமற்றது என எண்ணினர். 

ஆனால், பலரின் முயற்சியால் புவியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவல்ல விளையாட்டு நிகழ்ச்சி தொடங்கவுள்ளது' எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

13 நாட்கள் தொடரும் பராலிம்பிக் விளையாட்டு விழாவில் 22 வகையான விளையாட்டுகளில் 539 தங்கப் பதக்கங்களுக்காக 4,400க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தத்தமது ஆற்றல்களை 21 அரங்குகளில் வெளிப்படுத்தவுள்ளனர்.

இவ் விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து 9 மாற்றுத்திறனாளிகள் பதக்கங்களை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் பங்குற்றுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49