தசுன் ஷானக்க தலைமையிலான எஸ்.எல்.சி. க்றேஸ் அணி சம்பியன் 

25 Aug, 2021 | 06:51 AM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் நடத்தப்பட்ட டயலொக் - எஸ்எல்சி அழைப்பு இருபது 20 லீக் கிரிக்கெட்டில் தோல்வி அடையாத அணியாக எஸ்.எல். க்றேஸ் அணி சம்பியனானது.

Unbeaten Greys favourite to win SLC T20 League | Daily News

தினேஷ் சந்திமால் தலைமையிலான எஸ்.எல்.சி .ரெட்ஸ் அணியை செவ்வாய்க்கிழமை (24) இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில்  42 ஓட்டங்களால் வெற்றிகொண்டு தசுன் ஷானக்க தலைமையிலான எஸ்.எல்.சி .க்றேஸ் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

மினோத் பானுக்க, நுவனிது பெர்னாண்டோ, தசுன் ஷானக்க ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களும் நுவன் ப்ரதீப், புலின தரங்க, மதீஷ பத்திரண ஆகியோரின் திறமையான பந்துவீச்சுகளும் க்றேஸ் அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த க்றேஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 201 ஓட்டங்களைக் குவித்தது.

Dasun Shanaka 84, Kamindu Mendis 74 electrify SLC T20 Tourney - Sri Lanka  Cricket

மினோத் பானுக்க 51 பந்துகளில் 74 ஓட்டங்களையும் தசுன் ஷானக்க 17 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 4 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும் நுவனிது பெர்னாண்டோ 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

ரெட்ஸ் பந்துவீச்சில் அக்கில தனஞ்சய 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரெட்ஸ் அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 159 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

May be an image of 2 people, people standing and outdoors

துடுப்பாட்டத்தில் ஓஷத பெர்னாண்டோ 46 ஓட்டங்களையும் அக்கில தனஞ்சய ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும் அசேல குணரட்ன 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

க்றேஸ் பந்துவீச்சில் நுவன் ப்ரதீப் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் புலின தரங்க 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சம்பியனான க்றேஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 20 இலட்சம் ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெற்ற ரெட்ஸ் அணிக்கு 15 இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.

May be an image of 3 people, people standing and outdoors

தொடர்நாயகனாகத் தெரிவான தசுன் ஷானக்கவுக்கு கிண்ணத்துடன் 2 இலட்சம் ரூபா பணப்பரிசும் இறுதி ஆட்டநாயகனான மினோத் பானுக்கவுக்கு 50,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09