அடிப்படை பிரச்சினைகளை மறைக்கவே பொதுஜன பெரமுன புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளது - அசோக அபேசிங்க

Published By: Digital Desk 3

24 Aug, 2021 | 02:29 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் எழுந்துள்ள அடிப்படை பிரச்சினைகளை மூடி மறைக்கவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் பங்காளி கட்சி தலைவர்களை விமர்சித்து  புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் வைரஸ் தாக்கத்தினால் பதிவான மரணங்கள் அனைத்திற்கும் அரசாங்கம்பொறுப்பு கூற வேண்டும். சுகாதார தரப்பினரது ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்காமல் ஜனாதிபதி தான்தோன்றித்தனமாக செயற்பட்டதால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்க் கொண்டுள்ளது.

இடுகம கொவிட்  நிவாரண நிதியத்தின் மீது நம்பிக்கையில்லை. கொவிட்  முதலாம் அலையில் இந்நிதியம் ஆரம்பிக்கப்பட்டது.  பல்வேறு தரப்பினர் நிதியத்திற்கு உதவி புரிந்தார்கள். இறுதியில் அந்நிதியத்திற்கு  கிடைக்கப் பெற்ற நிதிக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்தவில்லை.

ராஜபக்ஷர்கள் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே சுதந்திர கட்சியினர் இடுகம நிதியத்திற்கு தங்களின் மாத சம்பளத்தை வழங்காமல், சுதந்திர கட்சி மட்டத்தில் நிதியத்தை உருவாக்கியுள்ளார்கள்.

ஆகவே ஐக்கிய மக்கள் சக்தி ' எதிர்க்கட்சியின் மூச்சு' என்ற நிதியத்தின் ஊடாக நிதி திரட்டி வைத்தியசாலைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்க தீர்மானித்துள்ளோம்.

சுகாதாரம், பொருளாதாரம் என பலதரப்பட்ட பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. இவ்விடயங்களை மூடி மறைப்பதற்காக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பங்காளி கட்சி தலைவர்களை  விமர்சித்து புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31