3 ஆவது தடுப்பூசி போடுவதை நிறுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் வேண்டுகோள்

Published By: Digital Desk 3

24 Aug, 2021 | 02:30 PM
image

தடுப்பூசி ஏற்றத்தாழ்வை சுட்டிக்காட்டி மூன்றாவது முறையாக தடுப்பூசி போடும் திட்டங்களை ஐரோப்பிய நாடுகள் நிறுத்திவைக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கெனவே கடந்த மாதமும் அவர் இதுபோன்றதொரு கோரிக்கையை முன்வைத்தார்.

ஆனால், அந்தக் கோரிக்கையை முன்வைக்கும்போதே இஸ்ரேல் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் பணியை ஆரம்பித்துவிட்டது.

ஜேர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆரம்பநிலையிலேயே வேண்டுகோளை நிராகரித்துவிட்டன.

இந்நிலையில் டெட்ரோஸ் அதானோம் நேற்று ஹங்கேரியில் ஊடகவியலாளர்களை சந்தித்தார்.

அப்போது, "இரண்டு மாதங்களாவது  மூன்றாவது தடுப்பூசி போடுவதை நிறுத்திவைக்கவும் என்று கோரினார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

"தடுப்பூசி தானம் தொடர்பாக உண்மையிலேயே நான் மிகுந்த விரக்தியில் உள்ளேன். உலகின் பல நாடுகள் முதலாம், இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை  செலுத்திக் கொள்ள வழியில்லாமல் தவிக்கும் சூழலில் சில நாடுகள் மூன்றாவது  தடுப்பூசி போடுவதை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன.

மூன்றாம் கட்டம் போடும் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு தானமாகக் கொடுக்கலாம்.

இதுவரை உலகளவில் உற்பத்தியாகியுள்ள 4.8 பில்லியன்  தடுப்பூசியில் 75 வீதமான தடுப்பூசிகளை 10 நாடுகளே பயன்படுத்தியுள்ளன. 

இந்த உலகில் உள்ள அனைவரும் பாதுகாப்பான நபராக மாறும் வரை எந்த ஒரு தனிநபரும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று கூறமுடியாது" எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25