கொவிட்-19 உயிரிழப்பு குறித்து போலியான செய்திகளை பரப்பியவர் கைது

Published By: Vishnu

24 Aug, 2021 | 08:12 AM
image

கொவிட்-19 உயிரிழப்புகள் குறித்து போலியான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பி, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்காக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் 36 வயதுடைய நுகேகொடை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் களுபோவில போதனா வைத்தியசாலையின் வார்டுகளில் குவிந்து கிடப்பதாக தெரிவித்து, பிற நாடுகளில் நாடுகளில் நிகழ்ந்த கொவிட் உயிரிழப்பு தொடர்பான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதவேற்றம் செய்தமைக்காகவே அவர் கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றில் மீண்டும் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38