மைத்ரிபால சிறிசேனவின் உத்தியோகப்பூர்வ இல்லம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை

Published By: Digital Desk 4

23 Aug, 2021 | 05:05 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவின் உத்தியோகப்பூர்வ இல்லம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க  குறிப்பிட்டுள்ள விடயம் முற்றிலும் பொய்யானது. 

பொய்யான கருத்தை அவர் திருத்திக் கொள்வார் என எதிர்பார்க்கிறோம் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் கொழும்பு நகரில் உள்ள இரண்டு சுகபோக இல்லத்தை ஒன்றினைத்து தனது பெயருக்கு  மாற்றிக் கொண்டதாகவும், அந்த இல்லத்தை திருப்பி கொடுப்பாரா என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க நேற்று சமூக வலைத்தளங்கள் ஊடாக வினவி பதிவேற்றம் செய்துள்ளார்.

இவரது கருத்து முற்றிலும் பொய்யானதுடன் நிகாரிக்கத்தக்கது. 1986 இலக்கம் 4 என்ற ஜனாதிபதிக்கு உரித்தான சட்டத்திற்கமையவும் மற்றும் 503,2005 என்ற  உயர்நீதிமன்றின் விண்ணப்பத்pற்கு அமையவும்  ஓய்வுப் பெறும் ஜனாதிபதி உயிர்வாழும் வரையில் அவர் வாழ்வதற்காக உத்தியோகப்பூர்வ இல்லம் அரசினால் வழங்கப்படும்.  வழங்கப்படும் இல்லம் ஒருபோதும் அவருக்கு சொந்தமாகாது. அரசுக்கே சொந்தமாகும்.

ஜனாதிபதி  பதவி வகித்து ஓய்வுப் பெற்ற அனைவருக்கும் அரசினால் உத்தியோகப்பூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளன.அந்த இல்லங்கள் அனைத்தும் அரசுடமையாகவே காணப்படுகிறது. அரசியல் மற்றும் நிர்வாக கட்டமைப்பு குறித்து சிறிதளவிலான அறிவு உள்ளவர்கள் இதனை அறிந்துக் கொள்வார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட தகவலறியும் சட்ட மூலத்திற்கு அமைய  இலங்கை பிரஜைகள் எவரும் இந்த உத்தியோகப்பூர்வ இல்லம் தொடர்பில்  அரச பொதுநிர்வாக அமைச்சிடமும், அல்லது ஜனாதிபதி செயலக பிரிவிடமும் விண்ணப்பித்து தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

1976 ஆம் ஆண்டு அணிசேரா அமைப்பிற்கான  நிர்மாணிக்கப்பட்ட   இரண்டு 'சமிட் பிளாட்;' காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி  டி.பி. விஜயதுங்கவின் ஆட்சி காலத்தில் ஒன்றினைக்கப்பட்டது. தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல  கடந்த காலங்களில் அமைச்சு பதவி வகித்த போது பயன்படுத்திய இல்லம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உத்தியோகப்பூர்வ இல்லமாக வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே பொய்யான கருத்து  அதிருப்தியளிப்பதுடன்  குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படையற்ற கருத்தை அவர் திருத்திக் கொள்வார் என எதிர்பார்க்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02