மட்டக்களப்பில் சட்டவிரோதமாக சாராயம் விற்றவரும் கசிப்பு உற்பத்தி செய்தவரும் கைது 

Published By: Gayathri

23 Aug, 2021 | 11:10 AM
image

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதூர் பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டத்தைப் பயன்படுத்தி அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட ஒருவரும் மற்றும் கசிப்பு உற்பத்தி செய்த ஒருவருமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.

இன்று அதிகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரையின் பேரில் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் புதூர் பகுதியில் நடத்திய திடீர் சுற்றி வளைப்பின் போதே இரு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்த சாராயம் மற்றும் கசிப்பு என்பண கைப்பற்றப்பட்டன.

இதன்போது 5000 மில்லிலீற்றர் கசிப்பு மற்றும் பெருமளவு போத்தலில் அடைக்கப்பட்ட சாராயம் டின்களில் அடைக்கப்பட்ட சாரயம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும்  பொருட்களும் மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்