மக்கள் வங்கியை  டிஜிட்டல் மயமாக்கல்  விவகாரம் ; 70 கோடி ரூபா கேள்விக்கோரல் குறித்து சபையில் வாதப்பிரதிவாதம்

Published By: Priyatharshan

10 Sep, 2016 | 09:17 AM
image

மக்கள் வங்கியை டிஜிட்டல் மயமாக்குவதற்கு 70 கோடி ரூபா கேள்விக்கோரல் கோரப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் மோசடிகள் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் அரசாங்கம் பாராளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பிலான விபரங்களை முன்வைக்க வேண்டுமென மஹிந்த ஆதரவு அணி எம்.பி. தினேஷ் குணவர்தன சபையில் கோரிக்கை விடுத்தார்.

 

இவ்விடயம் தொடர்பில் பத்திரிகைகளில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டமை குறித்து தனக்கு உடன்பாடு கிடையாது என பிரதியமைச்சர் எரான் விக்கிரமரட்ண இதன்போது சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது.

இதன்போது வாய்மூல கேள்விக்கான விடைகளின் பின்னர் தினேஷ் குணவர்தன எம்.பி. 23 இன் கீழ் இரண்டில்  விசேட கூற்றொன்றை முன்வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம்  கேள்வி எழுப்பி மேற்கண்ட விடயத்தை முன்வைத்தார்.

இதன்போது தினேஷ் குணவர்தன எம்.பி. சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மக்கள் வங்கியை டிஜிட்டல் மயமாக்குவதற்காக 70 கோடி ரூபா கேள்விக் கோரல் கோரப்பட்டுள்ளது. இக் கேள்விக் கோரல் 5 நாட்களுக்குள் முடிவடைந்துள்ளது.

இதன்பின்னணியில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என குற்றஞ்சாட்டி மக்கள் வங்கியின் இரண்டு உயரதிகாரிகள் ஆவணங்களுடன் எழுத்து மூலம் பிரதமர் அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்தோடு இவ்விடயம் தொடர்பில் சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகிள்ளன. எனவே இந்த மோசடி தொடர்பில் விசாரணைகளை நடத்தி இச்சபைக்கு அறிக்கையொன்றை அரசு முன்வைக்க வேண்டும். மக்கள் வங்கி இலங்கையின் தேசிய வங்கி.  எனவே அதனை பாதுகாக்க வேண்டியது அரசின் கடப்பாடாகும்.

அத்தோடு டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பிலான செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கு எதிராக மக்கள் வங்கியினால் வேறு பத்திரிகைகளில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்படுகின்றன. இது தவறான செயற்பாடாகும்  என்றார். 

இதன்போது சபையில் எழுந்த  சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் அதற்குரிய நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன விசாரணைகள் முடிந்ததும் பொறுப்பான அமைச்சர் பதிலளிப்பார் என்றார்.

 இதன்பின்னர் எழுந்த எதிர்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பி. எம்.பியுமான அநுர திஸாநாயக்க.

மோசடி இடம்பெற்றமை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை. அத்தோடு மக்கள் வங்கி டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் பாராளுமன்றத்திற்கும் அறிவிக்கப்படவில்லை.

ஒரு சில பத்திரிகைகளில் இது தொடர்பாக செய்திகளும் வெளியாகின. இவ்வாறானதொரு சூழ்நிலையில் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை எதிர்த்து வேறு பத்திரிகைகளில் விளம்பரங்கள் மக்கள் வங்கியினால் பிரசுரிக்கப்படுகின்றன.

விசாரணைகளோ ஆரம்பிக்கப்படாத சூழ்நிலையில் இவ்வாறு விளம்பரங்களை பிரசுரிப்பது பிழையான செயற்பாடாகும் என்றார்.

பந்துல குணவர்தன எம்.பி.யும் விளம்பரம் பிரசுரிப்பதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதோடு இது தகவல் அறியும் சட்டத்தை மீறுவதாகும் என்றார். 

இறுதியாக சபையில் எழுந்த அரசு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதியமைச்சர் எரான் விக்கிரமரட்ண பத்திரிகைகள் சிலவற்றில் வெளியான செய்திகளை எதிர்த்து விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு உடன்பாடு கிடையாது.

இவ்விடயம் தொடர்பாக முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு அடுத்த பாராளுமன்ற அமர்வில் பதில் வழங்கப்படும் என்றார்.  

இறுதியாக சபைக்கு தலைமை வகித்த பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால மக்கள் வங்கி இலங்கையின் தேசிய வங்கி. அதன் முன்னேற்றத்தை அனைவரும் எதிர்பார்க்கின்றோம். வங்கி கணனித்துறையில் முன்னேற்றமடைய வேண்டியது காலத்தின் தேவை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08