அமெரிக்க - இலங்கை கூட்டாண்மை குறித்து இரு தரப்பும் விரிவாக கலந்துரையாடல்

Published By: Digital Desk 2

22 Aug, 2021 | 11:58 AM
image

லியோ நிரோஷ தர்ஷன்

அமெரிக்காவில் இருந்து இலங்கையில் மேற்கொள்ளப்படும் தனியார் துறை முதலீடுகளை வரவேற்கிறோம். மேலும்  அமெரிக்க - இலங்கை கூட்டாண்மைப் பேச்சுவார்த்தை, வர்த்தக மற்றும் முதலீட்டுக் கட்டமைப்பின் கூட்டு ஆணைக்குழு மற்றும் அமெரிக்க - இலங்கை துறைசார் உரையாடல்கள் உள்ளிட்ட ஏனைய இருதரப்பு விடயங்கள் குறித்து அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுதல், எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொருளாதாரத் தாக்கத்தைத் தணித்தல் மற்றும் ஒத்துழைப்பை எதிர்பார்த்தல் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட ஆதரவுகளுக்காக இதன் போது நன்றி தெரிவித்தார்.  

 

பொருளாதார அபிவிருத்தி சபையின் அபிவிருத்தி அதிகாரிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கான திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி சபை,  சர்வதேச அபிவிருத்திகளுக்கான அமெரிக்க உதவி திட்டம் (யு.எஸ்.எயிட்)  மற்றும் இலங்கை வர்த்தக சபை ஆகியவற்றுக்கு இடையே சமீபத்தில் எட்டப்பட்ட முத்தரப்பு ஒத்துழைப்புக்களை வெளிவிவகார அமைச்சர் இதன் போது வரவேற்றார். அமெரிக்காவில் இருந்து இலங்கையில் மேற்கொள்ளப்படும் தனியார் துறை முதலீடுகளை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்  அமெரிக்க - இலங்கை கூட்டாண்மைப் பேச்சுவார்த்தை, வர்த்தக மற்றும் முதலீட்டுக் கட்டமைப்பின் கூட்டு ஆணைக்குழு மற்றும் அமெரிக்க - இலங்கை துறைசார் உரையாடல்கள் உள்ளிட்ட ஏனைய இருதரப்பு விடயங்களும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31