இந்த வருடத்தில் முதல்  8  மாதங்கள் வரையான கால பகுதியில்  மாத்திரம்  1570 பேஸ்புக்  தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக  கணனி அவசர நடவடிக்கை பிரிவின்  பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான்  சந்திர குப்த தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும்  அவர் குறிப்பிடுகையில்  

இந்த வருடத்தின் முதல் முதல்  8  மாதங்கள் வரையான கால பகுதியில்  மாத்திரம்  பேஸ்புக் தொடர்பில்    1570 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த வருடத்தில் அதிகமான முறைப்படுகள்  பேஸ்புக்மூலமாகவே கிடைத்திருக்கின்றன. இதனடிப்படையில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது   இந்த வருடத்தில் தான் அதிகமான பேஸ்புக் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

  போலி கணக்குகளை பயன்படுத்தி துஸ்பிரயோக சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்களே  குறித்த எண்ணிக்கையில்  அதிகமானோர் உள்ளடங்குகின்றனர். இதற்கு மேலதிகமாக அங்கீகரிக்கப்படாத முறையில் முக புத்தகங்களை பயன்படுத்திவர்கள்   6 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இணையத்தை பயன்படுத்தி சட்ட விரோதமாக நிதி மோசடியில் ஈடுபட்ட 05 தொடக்கம் 08  பேர் வரையில் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.