இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 2 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளால் இலங்கை அணியை வீழத்தி, தொடரை 2-0 என கைப்பற்றியது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிஇரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்று விளையாடியது.

இரு அணிகளுக்குமிடையிலான முதல் போட்டி பல்லேகலயில் இடம்பெற்றது.

இதில் 85 ஓட்டங்களால் இலங்கையை வெற்றிகொண்ட அவுஸ்திரேலிய அணி, சாதனை வெற்றியை பதிவு செய்து தொடரில்  1-0 என முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் 2 ஆவது இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் சந்திமால் முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தார். அதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக டில்ஷான், குஷால் பெரேரா களமிறங்கினர். தனது இறுதிப் போட்டியில் ஆடிய டில்ஷான் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.

நிதானமாக ஆடிய குஷால் பெரேரா 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வந்த இலங்கை அணி வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அணித்தலைவர் சந்திமால் 4 ஓட்டங்களுடனும் மெண்டிஸ் 5 ஓட்டங்களுடனும் கபுகெதர 7 ஓட்டங்களுடனும் திசர பெரேரா ஓட்டமெதனையுமு் பெறது ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதிவரை  பொறுமையாக விளையாடிய தனஞ்ஜய டி சில்வா  கன்னி அரைசதம் ( 62 )அடித்து ஆட்டமிழந்தார். 

இவரது நிதான நின்று ஆடியதால் இலங்கை 20 ஓவர்களில்  9 விக்கெட் இழப்புக்கு 128 ஓட்டங்களைப்பெற்று அவுஸ்திரேலிய அணிக்கு 129 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில், போல்க்னர், அடம் சம்பா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு 129 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 17.5 ஓவர்களில் 130 ஓட்டங்களைப்பெற்று 4 விக்கெட்டுகளால் இலங்கை அணியை வீழ்த்தி 1-0 என தொடரைக் கைப்பற்றியது.

அவுஸ்திரேலிய அணி சார்பில், மெக்ஸ்வெல் அதிகபட்சமாக 66 ஓட்டங்களை எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். 

இலங்கை அணி சார்பில் பத்திரண, டில்ஷான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 2-0 என அவுஸ்திரேலிய கைப்பற்ற, இருபதுக்கு 20 கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுத்த டில்ஷானை இலங்கை அணி தோல்வியுடன் வழியனுப்பி வைத்தது.