உயிரிழக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசாங்கம் தடுப்பூசியை வழங்கவில்லை - மரிக்கார்

Published By: Digital Desk 2

21 Aug, 2021 | 07:02 PM
image

எம்.மனோசித்ரா

நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெருமளவானோர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் என்று அரசாங்கம் கூறுகிறது. 

இவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாமல் இறக்கவில்லை. அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவில்லை என்பதே உண்மையாகும் என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று  சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமையளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தண்ணீர் குடத்தை ஆற்றல் எறிந்த போதும் , தம்மிக பாணியை பிரச்சித்தப்படுத்திய போது மூட நம்பிக்கைகளின் பின்னால் செல்லாமல் தடுப்பூசியை விரைவாக கொள்வனவு செய்யுமாறு நாம் வலியுறுத்தினோம். ஆனால் அதனை கவனத்தில் கொள்ளாமல் அரசாங்கம் எம்மை விமர்சித்தது.

இந்தியாவிடமிருந்து முதற்கட்டமாக தடுப்பூசியை கொள்வனவு செய்த போதே மேலதிக தடுப்பூசிகளைப் பெற்றிருந்தால் சிக்கல் ஏற்பட்டிருக்காது. 

தற்போது தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுகிறது என்று ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால் வினைத்திறனாக முன்னெடுக்கப்படுகிறதா? உலக நாடுகளில் முதற்கட்ட தடுப்பூசி பெற்றுக் கொண்டோர் இரண்டாம் கட்ட தடுப்பூசி பெற்றுக் கொண்டோருக்கிடையில் 10 இலட்சம் என்ற வித்தியாசமே காணப்படுகிறது. ஆனால் இலங்கையில் அவ்வாறல்ல.

ஜனாதிபதி தனது உரையில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளுக்கு முன்னுரிமையளித்த முதல் நாடு இலங்கை என்று குறிப்பிட்டார்.

அந்த தீர்மானத்தின் காரணமாகவே இன்று 60 வயதுக்கும் மேற்பட்ட பலரும் நாளாந்தம் கொவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கின்றனர். 

இவ்வாறு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று கூற முடியாது. அவர்களுக்கு தடுப்பூசி கிடைக்கப் பெறவில்லை. எனவே இவர்களின் மரணத்திற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08