மன்னாரில் முடக்கத்திற்கு மத்தியில் தொடரும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள்

Published By: Digital Desk 2

21 Aug, 2021 | 01:57 PM
image

நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை  இரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையிலான 10 நாட்கள் நாட்டை முழுமையாக  முடக்கியுள்ள நிலையில் மன்னார் மாவட்டமும் முடங்கியுள்ளது.

இன்றைய தினம் சனிக்கிழமை மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை தவிர ஏனைய செயற்பாடுகள் முடங்கியுள்ளன. 

அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. 

எனினும் நடமாடும் அத்தியாவசிய சேவைகள் இடம்பெற்று வருகின்றன. மீனவர்கள் கடற்தொழிலுக்கு சென்றுள்ளனர்.

மேலும் மருந்தகம்,வைத்தியசாலை,எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் செயற்பாடுகள்  வழமையை போன்று நடைபெற்று வருகின்றன. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய தினம் காலை மன்னார் மாவட்டத்தில் பைஸர் கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இன்று சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை,  முசலி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் கட்டையடம்பன் ம.வி பாடசாலை ஆகிய இடங்களில் பைஸர் கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில்,பொது சுகாதார வைத்திய அதிகாரிகள்,பொது சுகாதார பரிசோதகர்கள்,வைத்தியசாலை ஊழியர்கள் ஆகியோரின் உதவியுடன் குறித்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17