(லியோ நிரோஷ தர்ஷன்)

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை எதிர் கொள்வது தொடர்பான கூட்டு எதிர்க் கட்சியின் கூட்டம் ஒன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஹோமாகவில் நாளை (10) நடைப்பெறவுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள நிலையில் கூட்டு எதிர் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து  கொள்ளவுள்ளனர். 

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான அறிவித்தல்களை அரசாங்கம் வெளியிட்டுள்ள நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாத  இறுதியில் அல்லது பெப்ரவரி மாதம் முதல் வராத்தில் தேர்தலை நடாத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. 

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடாமல் தனித்து போட்டியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கூட்டு எதிர் கட்சியினர் முன்னெடுத்துள்ளனர். 

இதனடிப்படையில் ஆரம்பக்கட்ட தயார்ப்படுத்தல்களை முன்னெடுத்துள்ள மஹிந்த அணியினர் நாளை ஹோமாகம பகுதியில் ஆதரவாளர்களை சந்திக்க உள்ளனர். உள்ளுராட்சி மன்ற தேர்தலை மையப்படுத்திய முதலாவது கூட்டம் ஹோமாகமவில் இடம்பெறுவுள்ளது.