விமானத்திலிருந்து கீழே விழுந்து இறந்த ஆப்கானிஸ்தானின் இளம் கால்பந்து வீரர்

Published By: Digital Desk 3

20 Aug, 2021 | 12:34 PM
image

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது அந்நாட்டைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரர் ஒருவரும், விமானத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதனை ஆப்கானிஸ்தான் தேசிய இளையோர் கால்பந்து அணியின்  பேஸ்புக் பக்கம்  உறுதி செய்துள்ளது.

19 வயதான சாகி அன்வாரி, ஆப்கானிஸ்தான் தேசிய கால்பந்து இளையோர் அணிக்காக விளையாடியவர். 

ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி தலிபான்கள் காபூலை கைப்பற்றிய பின்னர் அங்கிருந்து தப்பி ஏராளமானவர்கள் விமானங்களின் சக்கரங்கள், இறக்கைகளில் அமர்ந்து ஆபத்தமான முறையில் பயணம் செய்தனர். 

அவ்வாறு பயணம் செய்து உயிரிழந்தவர்களில் சாகி அன்வாரியும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான போயிங் சி -17 விமானத்தில் சென்றபோது அவர் கீழே விழுந்து உயிரிழந்தார். 

இளம் கால்பந்து வீரரின் மறைவுக்கு சக வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17