அதிபர் - ஆசிரியர் பிரச்சினைக்கு சுபோதினி குழு அறிக்கை ஊடாக தீர்வாம்..!: ஆனால் நிதி இல்லையாம் - இலங்கை ஆசிரியர்  சங்கம்  

Published By: J.G.Stephan

19 Aug, 2021 | 05:17 PM
image

(இராஜதுரை ஹஷான்)
அதிபர் - ஆசிரியர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சுபோதினிகுழு அறிக்கையினை அமைச்சரவை உப குழுவினர் கொள்கை ரீதியில் ஏற்றுக் கொண்டுள்ளனர். இருப்பினும் அறிக்கையின் உள்ளடக்கத்தை செயற்படுத்த நிதி பற்றாக்குறை காணப்படுகிறது என்று குறிப்பிடுகிறார்கள்.

வேதன அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவை உப குழுவினருக்கும், நிதியமைச்சருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடம் பெறவுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மஹிந்த ஜாசிங்க தெரிவித்தார்.

 அமைச்சரவை உபகுழுவினருக்கும், ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆசிரியர் - அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளை முன்வைத்து  தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில்  நியமிக்கப்பட்டுள்ள  அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினர்களுக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இரு தரப்பு காரணிகளும் நியாயப்படுத்தப்பட்டன.

ஆசிரியர் - அதிபர் சேவையில் காணப்படும் வேதன பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கல்வி அமைச்சு மட்டத்தில் உருவாக்கப்பட்ட சுபோதினி குழு அறிக்கையினையாவது செயற்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தினோம். சுபோதினி அறிக்கையினை  கொள்கை ரீதியில் ஏற்றுக் கொள்கிறோம்.

சுபோதினி அறிக்கையினை செயற்படுத்துவதில் நிதிசார் பிரச்சினை காணப்படுகிறது. வேதன  அதிகரிப்பு தொடர்பில் இன்று நிதியமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளதாக அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினர்கள் குறிப்பிட்டார்கள்.

 அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக  உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். பிரச்சினைக்கு தீர்வு  பெற்றுக் கொடுக்கும் வரை நிகழ்நிலை முறைமை ஊடான  கற்பித்தலில்  ஆசிரியர்கள் ஈடுப்படமாட்டார்கள்  என்பதில் எவ்வித மாற்றமுலில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52