புதிய களனி பாலம் செப்டம்பர் இறுதியில் திறக்கப்படும் - ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

19 Aug, 2021 | 04:33 PM
image

இலங்கையின் முதலாவது அதிதொழில்நுட்ப கம்பிகளின் மீது நிர்மாணிக்கப்படும்  புதிய களனி பால நிர்மாணப் பணிகளில்  98.5% நிறைவடைந்துள்ளதாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

2021.08.19 ஆம் திகதி அமைச்சில் நடைபெற்ற களனி பால மீளாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். இந்தக் கூட்டம் ஜூம் (Zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது.

புதிய களனி பாலத்தின் மேலதிக பணிகளில் பாதுகாப்பு கேமராக்கள் நிறுவுதல்,  இரும்புப்  பாலத்திற்கு நிறம் தீட்டுதல், புதிய களனி பாலத்திற்கு நுழைவாயிலில் வடிகால் அமைப்பை நிறைவு செய்தல், பாலத்திற்கு மின்விளக்குகள் இடல், பாதுகாப்பிற்காக இரும்பு வேலிகள் அமைத்தல் மற்றும் நிலத்தை செப்பனிட்டு அழகுபடுத்தல் ஆகியவை அடங்கும்.  அவற்றை உரிய தரத்திற்கு அமைவாக துரிதமாக நிறைவு செய்யுமாறு நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர்  ஆர்.டபிள்யு.ஆர் பிரேமசிரிக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

புதிய களனி பாலத்தின் முடிவில் இருந்து ஒருகொடவத்தை சந்தி  வரை வீதியின் இருபுறமும் மரங்களை நடுவதற்கு அமைச்சின் அதிகாரிகளுக்கு அமைச்சர்  அறிவுறுத்தினார். 

இதற்கு தண்ணீர் வழங்க நிலத்தடி நீர் குழாய் அமைப்பை உருவாக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும்  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44