முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் ஜனா­தி­ப­தியின் தொழிற்சங்க ஆலோ­ச­க­ரு­மான பாரத ல­க்ஷ்மன் பிரே­மச்சந்­திர கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெலிக்கடை சிறைச்சாலையின் வார்ட் சி 03 அறையிலிருந்து வார்ட் பி 03 அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஏற்கனவே மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, பாரிய போதைப்பொருள் கடத்தல் மன்னன், வெலே சுதா எனப்படும் கம்பல விதானவுடனே துமிந்த சில்வா வார்ட் சி 03 அறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் பாதுகாப்பு கருதி வெலே சுதாவின் அறையிலிருந்து வார்ட் பி 03 அறைக்கு துமிந்த சில்வா மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை பாரத ல­க்ஷ்மன் பிரே­மச்சந்­திர கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்­றா­வது பிர­தி­வா­தி­யான தெமட்­ட­கொட சமிந்த எனப்­படும் சமிந்த ரவி ஜயநாத்,  வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் ஜனா­தி­ப­ தியின் தொழிற்சங்க ஆலோ­ச­க­ரு­மான பாரத ல­க் ஷ்மன் பிரே­மச் சந்­திர உள்­ளிட்ட நால்­வரை கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 8ஆம் திக­தி­யன்று பிற்­பகல் வேளையில் அங்­கொடை, ஹிம்­புட்­டான ஒழுங்­கையில் வைத்து சுட்டுக் கொலை செய்த குற்­றச்­சாட்டில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் துமிந்த சில்வா உள்­ளிட்ட ஐவ­ருக்கு கொழும்பு மேல் நீதி­மன்றம் நேற்று மரண தண்­டனை விதித்து  தீர்ப்­ப­ளித்­தமை குறிப்பிடத்தக்கது.