வைத்தியசாலை ஊழியர் 3 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் கைது 

Published By: Digital Desk 4

18 Aug, 2021 | 04:58 PM
image

மட்டக்களப்பு கல்குடாவில் இருந்து கல்முனைக்கு 3 ஆயிரம் போதை மாத்திரைகளை மோட்டர்சைக்கிளில் மறைத்து எடுத்துச் சென்ற பிரதான போதைப் மாத்திரை வியாபாரியான மட்டு போதனா வைத்தியசாலையில் ஊழியராக கடமையாற்றிவரும் ஒருவரை கல்முனை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) நள்ளிரவு விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கைது  செய்துள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை காகிதஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகலையடுத்து கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் சம்பவதினமான நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இராணுவ புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதன் போது மட்டு கல்ககுமாவில் இருந்து கல்முனைக்கு டியோ ரக மோட்டார்சைக்கிளில் போதை மாத்திரைகளை பொதி செய்து சூட்டசமாக மோட்டர்சைக்கிளின் இருக்கைக்கு கீழ் மறைத்து எடுத்துவந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் கல்முனை பகுதியில் வைத்து குறித்த நபரை நிறுத்தி சோதனையிட்டனர் இதன் போது 3 ஆயிரம் போதை மாத்திரைகளை மீட்டதுடன் குறித்த நபரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வருவதாகவும் 32 வயதுடையவர் எனவும் இவர் கொழும்பிலுள்ள முகவரோடு நேரடியாக போதை மாத்திரைகளை இறக்குமதி செய்து மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில்  போதைமாத்திரை ஏகவிநியோகத்தராக கடந்த 6 வருடங்களாக செயற்பட்டுவருவதாக அதிரடிப்படையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில்; தெரியவந்துள்ளது 

இனையடுத்து கைது செய்யப்பட்டவர் மற்றும் மீட்கப்பட்ட போதை மாத்திரை மோட்டர்சைக்கிள்  என்பவற்றை பொலிசாரிடம் விசேட அதிரடிப்படையின் ஓப்படைத்ததையடுத்து அவரை நீதிமன்றில் ஆஸர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08