நாட்டில் சுகாதார அவசர நிலைமை நிலவுகிறது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Published By: Digital Desk 4

18 Aug, 2021 | 11:58 AM
image

(எம்.மனோசித்ரா)

உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளதன் படி இலங்கையில் தற்போது சுகாதார அவசர நிலைமை நிலவுகிறது.

இவ்வாறான நிலையில் கொவிட் தொற்றாளர்கள் தொடர்பில் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்படுகின்ற தரவுகள் முரண்பட்டவையாகவும் தெளிவற்றவையாகும் காணப்படுவதானது , கொவிட் கட்டுப்படுத்தல் செய்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற 122 கிளை சங்கங்கள் ஊடாக உண்மையாக தரவுகளை , சுகாதார அமைச்சிலும் பார்க்க விரைவாக சேகரிக்கக் கூடியதாக இருக்கும்.

இவ்வாறு சேகரிக்கப்படும் தரவுகளுக்கும் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்படுகின்ற தரவுகளுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் நிலவுவதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரியப்படுத்தியுள்ளது.

தரவுகள் குறித்த சர்ச்சை குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவிக்கையில் ,

இலங்கையில் கொவிட் தொற்று பரவல் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளதன் படி இந்த தொற்று 'பொது சுகாதார அவசர நிலைமை' ஆகும்.

இதனை சரியான முறையில் முகாமைத்துவம் செய்ய வேண்டிய நிலைமையிலேயே நாம் உள்ளோம். அவ்வாறில்லை எனில் இது சகலருக்கும் பாரிய பிரச்சினையாக உருவாகும். ஒரு நாட்டில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டாலும் கூட அது ஏனைய நாடுகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

எனவே நாட்டில் நாளாந்தம் காணப்படுகின்ற உண்மையான கள நிலைவரத்தை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அதே போன்று ஏனைய தரப்பினருக்கும் , அதாவது அரசியல்தரப்பினர் , சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு உண்மையான நிலைமை அறிவிக்கப்பட்டால் மாத்திரமே சரியான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

எனவே தரவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் சரியான தரவுகளை வழங்குதல் என்பது மிக முக்கியத்துவமுடையதாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13