ஹோமாகம பகுதியில் புகையிரத பஸ்ஸின் மீது மோதுண்டு டிப்பர் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று (09) காலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மருதானையிலிருந்து ஹோமாகம நோக்கி பயணித்த புகையரத பஸ்ஸின் மீது மோதுண்டு குறித்த டிப்பர் ரக வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த விபத்தினால் டிப்பர் ரக வாகனத்தின் சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லையென  தெரிவிக்கப்பட்டுள்ளது.