திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவைக்காலத்தை  நீடிக்க தீர்மானம்: நீதி அமைச்சு 

Published By: J.G.Stephan

17 Aug, 2021 | 05:43 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா  அச்சுறுத்தல் நிலைமைகளை கருத்திற்கொண்டு,  நிரந்தர மற்றும் தற்காலிக சேவையில் உள்ள  திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவைக்காலத்தை 2021.12.31 ஆம் திகதி வரை நீட்டிப்புதற்கு நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நீதி அமைச்சின் சுற்றுநிருபத்தின் படி கீழ்வரும் பிரிவுகளில் உள்ளவர்களின் ‍சேவைக்காலம் நீட்டிகப்படவுள்ளன. 

1. 2021.08.31 திகதி முதல் 2021.12.31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 70 வயதை பூர்த்தி செய்த மற்றும் 70 வயதை பூர்த்தி செய்யவுள்ள திடீர் மரண விசாரண‍ை அதிகாரிகள்.

2. 2021.03.31 திகதியன்றுடன் சேவைக்கால நீட்டிப்பை பெறாத  முதல் தடவையாக நியமனம் மற்றும் சேவைக்காலம் நிறைவுபெற்ற  திடீர் மரண விசாரணை அதிகாரிகள். 

3. 2021.12.31 திகதிக்கு முன்பதாக முதல் தடவையாக  நியமன காலப்பகுதியை  உடைய மற்றும் சேவைக்கால நிறைவை அண்மித்துள்ள திடீர் மரண விசாரணை அதிகாரிகள்.   

இதன்படி மேலே குறிப்பிடப்பட்டுள்ள 1,2,3 ஆகிய பிரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ள திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவைக்காலத்தை  2021.12.31 ஆம் திகதி வரை நீட்டிப்பதற்கு நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது. ‍மேலும், 2021.12.31 திகதிக்குப் பின்னர் தமது சேவைக்காலத்தை நீட்டிப்பதற்கு வழமைப்போல் அமைச்சுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

எவ்வாறாயினும், ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் வேறு காரணங்களுக்காக சேவை நீட்டிப்பை பெறாத திடீர் மரண விசாரணை அதிகாரிகள் இந்த சுற்று நிரூபத்துக்கு உள்ளடங்க மாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38