மக்களை பலி கொடுக்க அரசாங்கம் தயாராகிவிட்டது : செப்டெம்பரில் மிக மோசமான அழிவுக்கு முகங்கொடுக்க நேரிடும் - எச்சரிக்கிறார் ராஜித

Published By: J.G.Stephan

17 Aug, 2021 | 01:39 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )


நாளாந்தம் பதிவாகும் கொவிட் மரண எண்ணிக்கையை மாற்றியமைத்து நாட்டின் உண்மை நிலைமையை மூடி மறைக்கும் வேலையை இராணுவம் முன்னெடுத்து வருவதாகவும், பொருளாதாரத்தை தக்கவைக்க மக்களை பலிகொடுக்கும் நிலையை அரசாங்கம் உருவாக்கியுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 



இதே நிலையில் நாட்டை அரசாங்கம் கொண்டுசெல்லும் என்றால் செப்டெம்பரில் மிக மோசமான அழிவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். அதற்கு முன்னர் மக்களின் உயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சபையில் வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி ஒன்றிணைந்து கொவிட் வைரஸ் தொற்று குறித்து மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் படி, ஒரு நாளுக்கான கொவிட் மரணங்களின் எண்ணிக்கையை அவதானித்தால், இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. வாரத்துக்கான  மரணங்களின்  எண்ணிக்கையை  கணக்கெடுத்தால் இலங்கை நான்காம் இடத்தில் உள்ளது.

மரண எணிக்கை அதிகரிக்கும் நாடுகளில் இலங்கையே முதலாம் இடத்தில் உள்ளது. இந்த கணிப்பீடு ஒரு மில்லியனுக்கு என்ற ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஜோன் ஹோப்கிங்க்ஸ் பல்கலைக்கழக ஆய்வின் பிரகாரம் நாளாந்த புதிய கொவிட் மரண அதிகரிப்பானது 5.72 வீதமென கூறுகின்றது. ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து ஜெர்மனி ஆகிய நாடுகள் அனைத்துமே எமக்கு பின்னால் உள்ளனர். நாம் இந்தியாவை விடவும் 15 வீதம் அதிகரிப்பில் சென்றுகொண்டுள்ளோம். இந்த தரவுகளை அரசாங்கம் மறைந்து செயற்பட்டுக்கொண்டுள்ளது என்றார். 

அரசாங்கம் முன்வைக்கும் தரவுகள் பொய்யானது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. ஆகவே இராணுவமே இந்த தரவுகளை வெளியிட்டு வருகின்றது.

ஆனால் சுகாதார பணியகம் இதில் தலையிடுவதில்லை. அவர்களின் மூலமாகவே மரணங்கள் குறைக்கப்படுகின்றது. ஒரு மேஜர் ஜெனரல் இந்த தவறுகளை செய்து வருகின்றார். சுகாதார அதிகாரிகள் நிராகரிக்கப்பட்டு இராணுவம் கையாண்டு வருகின்றது.

வைத்திய நிபுணர் அகம்பொடியின் அறிக்கைகள் இதுவரை தவறியதில்லை, அவர் மிகச்சரியான தகவல்களை கூறி வருகின்றார். மனித படுகொலை இடம்பெற்று வருவதாக அவர் கூறியுள்ள காரணிகளை கருத்தில் கொள்ளுங்கள். 

மக்களின் நிலைமையை கருத்தில் கொள்ளுங்கள், மக்களே தமது சுய முடக்கத்திற்கு சென்றுள்ளனர். நாளை தொடக்கம் பல வியாபாரிகள் தாமாக முடக்கத்திற்கு செல்ல தீர்மானித்துள்ளனர்.

ஆகவே நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை, மக்களே தாமாக தீர்மானம் எடுக்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை தக்கவைக்க மக்களை பலிகொடுக்கும் நிலையை  அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக நிபுணர்களே சுட்டிக்காட்டுகின்றனர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00