ஆப்கானில் கொடியேற்றிய தலிபான்கள் உலக அதிகார பணிப்போரின் பிரதிப்பலிப்பு?

Published By: Digital Desk 2

16 Aug, 2021 | 05:14 PM
image

லியோ நிரோஷ தர்ஷன்

தெற்காசிய அரசியலில் மாத்திரமல்லாது உலக அரசியலிலும் தீவிர அவதானத்திற்கு உட்பட்ட விடயமாக ஆப்கானிஸ்தானின் தற்போது நிலைமை அமைந்துள்ளது.

தலிபான்களின் இந்த ஆக்கிரமிப்பிற்கு பின்னணியில் உலக அதிகார பணிப்போரின் பிரதிப்பலிப்புகள் வெளிப்பட்டுள்ளதாக பன்னாட்டு அரசியல் ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர்.  

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி சுமார் நான்கு மாதத்திற்குள்  தலிபான்கள் முழுமையாக ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் முதற்கட்டமாக 100 அமெரிக்க படையினர் தாயகம் திரும்பினர். இவ்வாறு படிப்படியாக ஆப்கானிஸ்தான் போர்க்களங்களில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறிய நிலையில் அதனை சாதகமாக பயன்படுத்தி தலிபான்கள் அந்நாட்டு அரச படைகளுடன் போர்த்தொடுத்தனர்.

அமெரிக்காவை விட்டு அதன் படைகள் வெளியேற வேண்டும் என கடந்த ஆண்டு தோஹாவில் தலிபான்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதை அடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து படைகள் மற்றும் தூதரக அதிகாரிகள் வெளியேறினர்.  இதனால் கடந்த சில வாரங்களாகவே ஆப்கான் அரச படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்தது. 

இந்த இரு தரப்பு மோதல்களில் சிக்கி அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள், முக்கிய மாகாண தலைநகரங்கள் ஆகியவற்றை வேகமாக  தலிபான்கள் கைப்பற்றினர். 

 

இறுதியாக  ஆப்கான் தலைநகர் காபூலை பாகிஸ்தானுடன் இணைக்கும் ஜலாலாபாத்தை நேற்று முன்தினம் கைப்பற்றிய தலிபான்கள் பிற்பகலுக்கு பின்னர் காபூல் நகருக்குள் நுழைந்தனர்.

அதிபர் அஷ்ரப் கானியின் பதவியை இராஜினாமா செய்துவிட்டு வெளியேறுமாறு இதன் போது உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து தலிபான்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஆப்பான் ஜனாதிபதி அஷ்ரப் கானி தஜிகிஸ்தானுக்கு தப்பிச்சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஆப்கான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள  அனைத்து பன்னாட்டு இராஜதந்திர தூதரகங்கள் அனைத்தும் முடங்கிப்போயுள்ள நிலையில் அவற்றின் தற்காலிய செயற்பாட்டு மையமாக காபூல் - விமான நிலையம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மறுப்புறம் தலிபான்களின் இந்த ஆக்கிரமிப்பிற்கு ஏதிராக பல நாடுகளிலும் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆப்கானிஸ்தான் மக்கள் தற்போது காபுல் விமான நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்து வெளியேறுவதற்கு போராடிவருகின்றனர். மறுப்புறம் தலிபான்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக கனடா , பிரித்தானியா,அவுஸ்திரெலியா , மற்றும் ஒஸ்ரியா போன்ற நாடுகளில் இடம்பெயர்ந்து வாழுகின்ற நிலையில் அவர்களும்  தலிபான்களின் ஆக்கிரமிப்பை கண்டித்து  போராட்டம் நடத்தி வருகின்றனர். தலிபான்கள் வசம் மீண்டும் ஆட்சி சென்றுள்ளமை பெரும் அழிவிற்கு வழிவகுக்கும் என்று ஆர்ப்பாட்டத்தில்  ஈடுப்பட்டுள்ளனர். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் உரிமைகள் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் புலம்பெயர்ந்த ஆப்கான் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மறுப்புறம் தலிபான்களுக்கு மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பாகிஸ்தான் வாய்ப்பளித்தாக குறிப்பிட்டும் எதிர்ப்பலைகள் மேலோங்கியுள்ள நிலையில் பாக்கிஸ்தானுக்கு எதிராக தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன. மறுப்புறம் இந்து – பசுபிக் அதிகார போட்டிக்கு  ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எந்தளவு தாக்கம் செலுத்தும் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. தெற்காசியாவில் ஒரு எதிரணியை உருவாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாகவா  ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு அமைகின்றது போன்ற பூகோள அரசியலுடன் தொடர்புப்பட்டு பல அவதானிப்புகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் இராஜதந்திரிகள் மற்றும் பிரஜைகளை மீட்கும் வகையில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உட்பட பல நாடுகள் காபுல் விமான நிலையத்திற்கு சிறப்பு விமானங்களை அனுப்பி வைத்ததுள்ளன. ஆப்பானிஸ்தானின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22